மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 ஜன 2022

விதார்த்தின் கார்பன் எப்படி இருக்கிறது?

விதார்த்தின் கார்பன் எப்படி இருக்கிறது?

கொஞ்ச காலமாகவே ஆங்கிலப் படங்களை ஆக்கிரமித்திருக்கும் டைம் மெஷின், டைம் லூப் சம்பந்தமான திரைக்கதைகள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து வருகின்றன. அதனை புரிந்துகொள்கின்ற சினிமா ரசிகன் இங்கு உண்டா என்கிற கேள்விக்கு

டைம் லூப் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மாநாடு படத்தின் வெற்றி பொய்யாக்கிவிட்டது.

விதார்த் நடிக்கும் 25வது படமாக கார்பன் படத்தின் செய்திகள் வெளியானது.

பொங்கல் போட்டியில் களமிறங்கியுள்ள கார்பன் திரைக்கதைப்படி நாயகன் காண்கிற கனவு எல்லாம் அப்படியே நடக்கும் என்ற நிலையில் அதை சரி செய்து கொள்ள முயலும் அவரது போராட்டம் தான் கதை.

போலீசாக வேண்டும் என்ற லட்சியக் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் விதார்த்துக்கு குப்பை லாரி ஓட்டும் தந்தையே தாயுமானவனாகவும் இருக்க, வேலைக்குப் போய் முதல் சம்பளம் வாங்கிய பின்தான் உன்னிடம் பேசுவேன் என்ற வைராக்கியத்தில் இருக்கிறார்.

வழக்கமாக அவர் கனவில் வருவதெல்லாம் நடக்க, அவரது அன்றைய நாள் உறக்கத்தில் வரும் கனவில் அவரது தந்தை விபத்துக்கு உள்ளாவதாக வர, அப்பாவைக் காக்க அவர் எடுக்கும் முயற்சி என்ன ஆனது என்பது படத்தின் ஒன் லைன்.

அன்பறிவு படத்தில் வில்லனாகி விட்ட விதார்த் நாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் படம் கார்பன். அவரது சீரியசான முகத்துக்கு இந்த வேடம் பொருத்தமாகவே இருக்கிறது. அப்பாவுக்கு விபத்து ஏற்படும் என்று அறிந்த நிலையிலும் அதைத் தவிர்க்க இயலாத நிலையை அற்புதமாக நடித்துத் தாங்கி இருக்கிறார்.

அதேபோல் அது விபத்து இல்லை திட்டமிட்ட கொலை என்று தெரிந்து கொலையாளி யார் என்று தெரியும்போது அதனால் ஏற்படும் தவிப்பையும் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

அம்மாவை ஈடுசெய்ய மனைவி வருவாள். ஆனால் அப்பாவுக்கு இணையா யாரும் வரமாட்டார்கள் என்று அவர் சொல்வது நெகிழ்ச்சி.

ஸ்வப்னாவின் அறிமுகம் அப்பாவியாக இருந்தாலும் அடுத்தடுத்து அவர் வரும் காட்சிகளில் அதகளம் செய்து பொருந்திவிடுகிறார். விதார்த்தின் அப்பாவாக நடித்திருக்கும் மாரிமுத்துவின் பாசம் நெகிழ வைத்திருக்கிறது. நேரில் பேசாத மகன் போன் அடித்ததும் புரிந்து கொண்டு அவனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைக்கும் போது அப்பா பாசமும் அன்னைக்கு ஈடானது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

போலீஸ் அதிகாரி மூணார் ரமேஷ், இளநீர் விற்கும் விக்ரம் ஜெகதீஷ், இன்ஷுரன்ஸ் ஏஜென்ட் டவுட் செந்தில், ஏடிஎம் வாட்ச்மேன் மூர்த்தி என்று எல்லோருமே சரியாகப் பயன்பட்டு இருக்கிறார்கள். இருந்தாலும் திரைக்கதை இயல்பாக இல்லாமல், வில்லத்தனத்தைக் காதல் வெல்கிறது என்பது வழக்கமான சினிமாத்தனம் என்கிறபோது திரைக்கதை வலிமை இழக்கிறது. விவேகானந்த் சந்தோசம் ஒளிப்பதிவும் சாம்.சி.எஸ்ஸின் இசையும் ஓகே.

மாநாட்டுக்கு முந்தி வராததால் அதன் கார்பன் காப்பி என்று இப்போது சொல்லப்படக் கூடும்.

-இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

ஞாயிறு 16 ஜன 2022