அடிமனசு ஆசையும் ஆன் லைன் கிளாஸும்: அப்டேட் குமாரு


இன்னிக்கு கிராமத்துல படித்துறையில என் மகனோட குளிச்சிட்டிருந்தேன். அப்ப, என் கூட ஸ்கூல்ல படிச்ச நண்பன் திருப்பூர்லேந்து ஊர்க்கு வந்திருந்தவன் குளிக்க வந்தான். நலம் விசாரிச்சு முடிச்சுட்டு... கொரோனாவால பிள்ளைங்களோட படிப்பு பாதிக்கப்படுறதப் பத்தி பேசிக்கிட்டிருந்தோம். ‘இந்த கொரோனா நாம ஸ்கூல் படிக்கிறப்ப வந்திருக்கக் கூடாதா... நம்மளை எல்லாம் படிக்க சொல்லி, என்ன பாடு படுத்தினாங்க’னு நண்பன் சொல்ல... நானும் ஆமாமானுனு சொல்லிப்புட்டேன். உடனே என் மகன், ‘அங்கிள்... அடிமனசுல இந்த ஆசைய வச்சுக்கிட்டே எங்களை ஏன் எப்ப பாத்தாலும் ஆன் லைன் கிளாஸ் ஆன் லைன் கிளாஸ்னு கொடுமைப்படுத்துறீங்க?’னு கேட்க, அவன் துண்டை தோள்ல போட்டுக்கிட்டு கெளம்பிட்டான். இப்ப என்னை முறைச்சுப் பாக்குறான் என் மகன்.
நீங்க அப்டேட் பாருங்க.
balebalu
அஞ்சு விரலும் ஒன்னு போல இருக்காது ன்னு சொல்லுறது
"கொரோனா வேரியன்ட்" க்கும் பொருந்தும் போல
-OmicronVariant
மயக்குநன்
தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா, மன்னர் ஆட்சியா?- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.
கண்டிப்பா 'டெல்லி ஆட்சி' கிடையாது..!
ச ப் பா ணி
கண்ணால் பார்ப்பதும்,காதால் கேட்பதும்
பொய்..தீர விசாரிப்பதே மெய்..
தீர விசாரிக்கிறப்ப கண்ணையும் காதையும் பொத்திக்குவியாடா
மோடியையும் நிம்மியையும் செதச்சுடாங்க 😂😂😂😂
— சாமானியனின் சவுக்கு© (@Samaniyantweet) January 15, 2022
சங்கிகள் கதறல் start 😍😍😍 pic.twitter.com/9DwCRUaGUO
சரவணன். 𝓜
கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்போம் - நடிகர் ரஜினிகாந்த்.
குறிப்பா கட்சி ஆரம்பிக்காம எஸ்கேப் ஆகிடலாம்.
மயக்குநன்
ஒரு கையில் கரும்பும், இன்னொரு கையில் பொங்கல் பரிசுப் பையையும் எடுத்துச் செல்லும் மக்கள் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி?- முதல்வர் ஸ்டாலின்.
ஆமா தலைவரே... வெல்லமா உருகிட்டாங்க..!
நாகராஜசோழன்.MA.MLA.
இரவு உணவின் போது
பேசப்படும் அன்பான வார்த்தைகளில்
அடங்கி இருக்கிறது
அந்நாளின் அனைத்து சங்கடங்களுக்கான
ஆறுதல் !
கடைநிலை ஊழியன்
ஏன்ணே அவன அடிக்குறீங்க..
10 முதல் 12 ஆம் கிளாஸ் படிக்கிறவங்களுக்கு லீவு விட்டாங்க.. கம்பெனில எப்ப 2-3 years experience உள்ளவங்களுக்கு லீவு விடுவாங்க னு கேக்குறான்.
ℳ𝐬𝐝彡இதயவன்
பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், ரூ.317.08 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ~
படுபாவிங்களா நான் டாஸ்மாக் ல பரவ மாட்டேன் னு சத்தியம் பண்ணுனதை தெரிஞ்சிகிட்டு ரெக்கார்டு வைச்சிட்டிங்களேய்யா~ கொரோனா
balebalu
திரும்பவும் ஆன்லைன் கிளாஸ் நு தெரிஞ்சிருந்தா புது பை, பென்சில் பாக்ஸ் எல்லாம் வாங்கி இருக்க வேண்டாம் Grinning face
-அடேய்கொரோனா
-பெற்றோர்மைண்ட்வாய்ஸ்
PrabuG
300,400 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ எல்லையில் தயாராக இருக்கின்றனர் - ராணுவ தளபதி நரவானே.
ஜி ~
இவ்வளவு லேட்டா வரீங்களே.. தேர்தல் அவசரம் தெரியாம.
This video ll never get old😂 pic.twitter.com/Furfp53isK
— Karal🍁 (@ItsKaral) January 14, 2022
மயக்குநன்
திமுக என்பது ஆலமரம்!- அமைச்சர் தங்கம் தென்னரசு.
வாரிசுகள்தான் விழுதுகளா..?!
கோழியின் கிறுக்கல்!!
விசாரணைக்கு பின் தண்டனை - நீதிமன்றம்!
தண்டனைக்கு பின் விசாரணை - வீட்டுமன்றம்!
-லாக் ஆஃப்