மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

பஞ்சாப் மாநில சுற்று பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல், பிரதமரின் பாதுகாப்பில் தவறு இருந்தால் அந்த நாடு பாதுகாப்பானதாக இருக்க முடியாது என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் சித்தார்த், சாய்னாவின் பாலினம் குறித்து டிவிட்டரில் இரட்டை அர்த்தத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக சித்தார்த் இதுவரை வெளியிட்ட அரசியல், சினிமா பதிவுகளுக்கு வரவேற்பும், விமர்சனங்கள் இருந்திருக்கிறது. ஆனால் சாய்னா சம்பந்தமான பதிவு விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிய நிலையில் நடிகர் சித்தார்த், சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார். சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சாய்னா, ‛அவரின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையென்றாலும், ஒரு பெண்ணை இதுபோன்று குறிவைத்து தாக்கக் கூடாது. எனினும் அவர் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பாராக, எனக் கூறியிருந்தார்.

சித்தார்த்தின் இந்த மன்னிப்பு அறிக்கைக்கு பல்வேறு விதமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் ‛இந்த அறிக்கை நன்றாக எழுதப்பட்டுள்ளது. பொது வெளியில் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும்' என பாராட்டியிருந்தார்.

வழக்கம்போல் சம்பந்தம் இல்லாமலே பிரச்சினைகளுக்குள் நுழையும் நடிகை கஸ்தூரி, தைரியமா? எல்லாத் தரப்பிலிருந்தும் சீற்றம் தான் எழுந்துள்ளது' என குறிப்பிட்டு தன் பங்குக்கு தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

அம்பலவாணன்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

சனி 15 ஜன 2022