மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

பிக்பாஸ் 5: ஆரி அழைக்கப்பட்டாரா?

பிக்பாஸ் 5:   ஆரி அழைக்கப்பட்டாரா?

பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனின் இறுதி நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சிக்கான இறுதி படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது. ராஜூ வெற்றியாளராகவும், பிரியங்கா இரண்டாம் இடம் பிடிப்பார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சையிலிருந்த பிரியங்காவும் நேற்றைய எபிசோடில் திரும்ப வந்திருக்கிறார். இந்த நிலையில் இறுதி நிகழ்ச்சியில் முந்தைய சீசனின் வெற்றியாளர்கள் இறுதி போட்டியாளர்களை வீட்டிலிருந்து இறுதி மேடைக்கு அழைத்து வருவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த சீசனின் வெற்றியாளரான ஆரி இறுதி நிகழ்ச்சிக்கு வருவார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால், இறுதி நிகழ்ச்சிக்கு ஆரி அழைக்கப்படவில்லை என அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர், 'இறுதி வெற்றியாளர் கையில் அந்த வெற்றிக் கோப்பையை நான் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் நீங்கள் ஆர்வமுடன் என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பீர்கள் எனத் தெரியும். நானும் உங்களையும் கமல் சாரையும் இறுதி மேடையில் சந்திக்கும் அந்த தருணத்திற்காகவே காத்திருந்தேன்.

ஆனால், எதிர்பாராத விதமாக என்னைத் தொலைக்காட்சி தரப்பு அழைக்கவில்லை' என வருத்தத்துடன் நடிகர் ஆரி விஜய் தொலைக்காட்சியையும் நடிகர் கமல்ஹாசனையும் டேக் செய்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் ஆரி அழைக்கப்பட வேண்டும் என கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆதிரா

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

சனி 15 ஜன 2022