மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

யுவன்தான் படத்தை காப்பாற்ற வேண்டும்: விஷால்

யுவன்தான் படத்தை காப்பாற்ற வேண்டும்: விஷால்

து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயாதி, ரவீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'வீரமே வாகை சூடும்'. இந்த படத்தை நடிகர் விஷால் தயாரித்து இருக்கிறார். இந்த படம் இந்த மாதம் 26ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் விஷால், "கொரோனாவின் இக்கட்டான சூழலில் இந்த விழா நடத்துவது குறித்து தயக்கம் இருந்தது. து.ப. சரவணனின் 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற குறும் படம் பார்த்தேன். அந்த படம் பிடித்து போய் அவரிடம் கேட்ட கதைதான் 'வீரமே வாகை சூடும்’.

இப்படத்தில் எனக்கு பிடித்தது கதையை விட திரைக்கதை தான். புதிய இயக்குனருக்குள் இருக்கும் வெறியைப் பயன்படுத்தி ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறேன்.

புது இயக்குனரிடம் நல்ல கதை கேட்டு விட்டால், யுவன் தான் இசையமைப்பாளர் என்று கூறுவேன். இப் படத்திற்கும் அதேபோல் யுவன் தான் மியூசிக். என்னுடைய முந்தைய படங்களை எல்லாம் யுவன் பார்த்து விட்டு 'அழுதுட்டே இருக்காங்க, சண்டையாவே இருக்கே ப்ரோ' என அவருடைய கருத்தை சொல்வார். அப்போது அவரிடம் 'எப்படியாவது நல்ல மியூசிக் கொடுத்து படத்தை காப்பாற்றி விடுங்கள் என விளையாட்டாக சொல்வேன்'.

நாயகனை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் சில படங்கள் தான் வெற்றியடையும். ஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் படம் அனைத்துமே வெற்றியடையும். அந்த வகையில் இப்படத்தில் ரவீனாவுக்கு நாயகிக்கு இணையான முக்கியத்துவம் இருக்கிறது.

இதில் நடிகர் மாரிமுத்து என்னிடம், நீ சண்டையை விடவே மாட்டியா? என்பார். அதை எதிரி தான் முடிவு செய்யணும் என்று கூறுவேன். இது தான் படத்தின் கரு.

என்னைப் பொறுத்தவரை திரையரங்கம்தான் என் கோயில் ரசிகர்கள் எப்போதுமே என் நண்பர்கள் " என நெகிழ்ச்சியாக பேசினார்.

ஆதிரா

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

சனி 15 ஜன 2022