மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

சுந்தர் சி நடிக்கும் ஒன் 2 ஒன்!

சுந்தர் சி நடிக்கும் ஒன் 2 ஒன்!

ஒன் 2 ஒன் எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை 24 HRS புரடெக்ஷன்ஸ் சார்பில் கே. திருஞானம் தயாரித்து இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை பொங்கல் திருநாளான இன்று(ஜனவரி 14) நடைபெற்றது. சுந்தர் சி உள்ளிட்ட படத்தில் நடிக்கும் நடிகர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர் சி-க்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இதற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்துக்கு தற்போது தமிழ் திரையுலகில் படு பிஸியாக இருக்கும் முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அவருடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தவுடன், அவரது பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இராமானுஜம்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

வெள்ளி 14 ஜன 2022