மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

விக்ரமின் 'மகான்': இயக்குநர் கொடுத்த அப்டேட்!

விக்ரமின் 'மகான்': இயக்குநர் கொடுத்த அப்டேட்!

நடிகர் விக்ரமின் 'மகான்' திரைப்படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் 'மகான்'. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இதனின் படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் படம் இந்த மாதம் 26ஆம் தேதி அன்று அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிறிது நாட்களுக்கு முன்பு படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் மகான் டீமுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு , “’ 'மகான்' படம் தொடர்பான அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்து விட்ட நிலையில் படத்தை உங்களிடம் காண்பிக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். படம் வெளியாவது மற்றும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் " என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ரசிகர்கள் 'மகான்' திரைப்படம் தொடர்பான ஹேஷ்டேக்கினை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆதிரா.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வெள்ளி 14 ஜன 2022