மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

மீண்டும் கதாநாயகனாக கருணாஸ்

மீண்டும் கதாநாயகனாக கருணாஸ்

நந்தா படத்தில் இயக்குநர் பாலா அறிமுகப்படுத்திய லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் ரொம்ப பிரபலம். அதில் நடித்த கருணாஸ் காமெடி நடிகராக தொடராமல் திடீரெனெ திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகன் பிம்பம் தொடர்ச்சியான வெற்றியை தரவில்லை. சினிமா பிரபலத்தை பயன்படுத்தி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து திருவாடனை தொகுதியில் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக- திமுக என இருதரப்பிலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் சினிமாவில் நடிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் என்கின்றனர் அவரது நட்பு வட்டத்தில்.

கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ஆதார் படத்தின் முதல் பார்வை தமிழர் திருநாளான இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். கருணாஸ் கதாநாயகனாக நடித்து வெளியான அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை இயக்கிய ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், திலீபன், பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். ‘ஆதார்' படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”எளிய மனிதர்களின் வலியை பேசும் யதார்த்த சினிமாவாக ஆதார் உருவாகியிருக்கிறது” என்றார். ஆதார் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் என்ற நம்பிக்கையை பட குழுவினர் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு சான்றாக 'ஆதார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் முன்னர், உலக அளவில் யதார்த்த சினிமா படைப்பாளியாக போற்றப்படும் இந்திய திரை சிற்பி சத்யஜித்ரேயின் உருவப்படத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கின்றனர்.

இராமானுஜம்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

வெள்ளி 14 ஜன 2022