மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

பிக்பாஸில் இருந்து பிரியங்கா வெளியேற்றப்பட்டாரா ?

பிக்பாஸில் இருந்து பிரியங்கா வெளியேற்றப்பட்டாரா ?

பிக்பாஸ் தமிழின் ஐந்தாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இறுதி போட்டியாளர்களாக ராஜூ, பிரியங்கா, அமீர், பவானி, நிரூப் ஆகியோர் இருக்கின்றனர். இதில் இறுதி வாரத்தை ஒட்டி, முன்பு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நாடியா சங்க், தாமரை, சிபி, அபிநய், சுருதி ஆகிய போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர்.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளையும் பிக்பாஸ் ஏற்பாடு செய்துள்ளார். இதில் எல்லா போட்டியாளர்களும் இருக்க பிரியங்கா மட்டும் அதில் இடம்பெறவில்லை. இதனால் பிரியங்கா வெளியேற்றப்பட்டாரா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தாமரை நிகழ்ச்சியின் வெற்றியாளராக வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார். அடுத்து ராஜூ அல்லது பிரியங்கா டைட்டில் வின்னராக வரலாம் என எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் நிலையில் பிரியங்கா நிகழ்ச்சியில் இல்லாமல் இருப்பது அவர் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், பிரியங்காவுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் மருத்துவ பராமரிப்பில் இருப்பதாகவும் சீக்கிரம் அவர் நிகழ்ச்சிக்கு திரும்ப வந்துவிடுவார் எனவும் விஜய் தொலைக்காட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முந்தைய சீசனில் கூட ஓவியா, ஜூலி, இந்த சீசனில் அமீருக்கு காலில் அடிப்பட்ட போது என இவர்கள் அனைவரும் பிக்பாஸ் மருத்துவக்குழு பராமரிப்பில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

வெள்ளி 14 ஜன 2022