மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

கார்த்தியின் 'விருமன்': முதல் பார்வை!

கார்த்தியின் 'விருமன்':  முதல் பார்வை!

முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் 'விருமன்'. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், இன்று பொங்கல் பண்டிகையை ஒட்டி படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கொம்பன்' படத்திற்கு பிறகு கார்த்தி, முத்தையா இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'விருமன்'. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், இதில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் தேன்மொழி.

கிராமத்து பின்னணியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 'பருத்தி வீரன்' படத்தில் இருப்பது போல கார்த்தியை இதிலும் பார்க்க முடிகிறது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் இந்த படம் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

விருமன் என்பது குலசாமியின் பெயர் எனவும், அது பிரம்மனை குறிக்கிறது எனவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதன் இயக்குநர் முத்தையா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா.

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

வெள்ளி 14 ஜன 2022