மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

தனுஷ் படத்தில் பாடிய தெருக்குரல் அறிவு

தனுஷ் படத்தில் பாடிய தெருக்குரல் அறிவு

தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தின் ஓப்பனிங் பாடலை அறிவு பாடியுள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் மாறன். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் மாறன் படத்தின் ஓப்பனிங் பாடலை அறிவு பாடியுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். மாறன் படத்தின் ஓப்பனிங் பாடலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ள அவர், பாடலாசிரியர் விவேக் வரிகளில் நடிகர் தனுஷுடன் இணைந்து தெருக்குரல் அறிவு பாடியுள்ளார்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தி கேஸ்ட்லெஸ் கலக்டிவ் பேண்டில் அறிமுகமாகி, வாத்தி ரைடு, நீயே ஒலி, வாய்ஸ் ஆப் யுனிட்டி, போன்ற பல பாடல்களை பாடியவர் அறிவு.

மாறன் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-மகா

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

வெள்ளி 14 ஜன 2022