மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

மூன்றாவது டெஸ்ட்: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா - 70 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

மூன்றாவது டெஸ்ட்: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா - 70  ரன்கள் முன்னிலையில் இந்தியா!

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த... தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களுடன் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்து, 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் (ஜனவரி 11) தொடங்கியது.

கேப் டவுனில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் குவித்தார். புஜாரா 43 ரன்களும், ரிஷப் பண்ட் 27 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்ரிக்கா தரப்பில் ரபாடா நான்கு விக்கெட்டுகளும், மார்கோ ஜேன்சன் மூன்று விக்கெட்டுகளும், ஆலிவியர், நிகிடி, கேஷவ் மகராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 12) இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய தென்னப்பிரிக்கா 210 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் சேர்த்தார். டெம்பா பவுமா 28 ரன்களும், கேசவ் மகராஜ் 25 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் பும்ரா ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார். உமேஷ் யாதவ், முகமது ஷமி தலா இரண்டு விக்கெட்டுகளும் தாக்கூர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல் 10 ரன்களிலும் மயங்க் அகர்வால் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய புஜாரா 9 ரன்கள், விராட் கோலி 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்து 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்றைய (ஜனவரி 13) ஆட்டத்தில் 300 ரன்களுக்கு மேல் எடுத்து இந்திய அணி முன்னிலை பெற்றால், தொடரைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளது.

-ராஜ்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

வியாழன் 13 ஜன 2022