மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

முத்தையா முரளிதரன் பயோபிக்: ஹீரோ யார்?

முத்தையா முரளிதரன்  பயோபிக்: ஹீரோ யார்?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

அந்தப் படத்திற்கு '800’ என்று தலைப்பிடப்பட்டு முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான முதல் பார்வைபோஸ்டர் வெளியிடப்பட்டன. ஆனால், ஈழ ஆதரவாளர்கள், தீவிர தமிழ் உணர்வாளர்கள் விஜய்சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் அவரை பற்றி மட்டுமல்லாமல் குடும்பத்தாரை பற்றியும் முன்வைக்கப்பட்டன. இயக்குநர் பாரதிராஜா இந்த படத்தில் நடிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பகிரங்க கடிதம் எழுதினார்.

பின்னர், ஒரு திரைப்படத்தில் நடிப்பதை அரசியல் ரீதியாக தமிழகத்தில் அணுகப்படுவதை விரும்பாத விஜய்சேதுபதி அப்படத்திலிருந்து விலகுவதாக திடீர் என அறிவிப்பை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முடிவுகட்டினார்.

அதன் பிறகு இப்படம் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வந்தது.இந்நிலையில், தற்போது இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் மூலம் பிரபலமான தேவ் படேல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தை தர்மோசர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது என அதிகாரபூர்வமற்ற வகையில் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 14க்கு பின் படம் மீண்டும் தொடங்கப்படுவது பற்றிய முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என தயாரிப்பாளர் வட்டாரம் தெரிவிக்கிறது.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

வியாழன் 13 ஜன 2022