மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

சமந்தாவின் மகிழ்ச்சி : மனம் திறந்த நாக சைதன்யா

சமந்தாவின் மகிழ்ச்சி : மனம் திறந்த நாக சைதன்யா

நடிகை சமந்தாவுடன் திருமண உறவில் இருந்து பிரிந்ததை அடுத்து , விவாகரத்து குறித்து நடிகர் நாக சைதன்யா முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி நான்கு ஆண்டுகளான நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 'நாங்கள் பிரிய இருக்கிறோம்' என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

இவர்களது பிரிவிற்கு காரணம் திருமணத்திற்கு பிறகு சமந்தா எடுத்து நடித்த கதாப்பாத்திரங்கள் என்றும், அவர் குழந்தை பெற்று கொள்ள சம்மதிக்கவில்லை என பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால் இதெல்லாம் பொய் என்றும் அது தங்களது தனிப்பட்ட காரணம், எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதுபோன்ற தவறான செய்திகள் பரப்புவதை தவிருங்கள் என்றும் சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், விவாகரத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் குறித்தும் அதில் இருந்து மீண்டு வர தனது நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களது வழிகாட்டுதலே முக்கியமானதாக இருந்தது எனவும் சமீபத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். மன அழுத்தம் குறித்து மருத்துவர்களிடம் கலந்து ஆலோசிப்பது இயல்பாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது நாக சைதன்யா சம்ந்தாவுடனான பிரிவு குறித்து தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். அதில், " அந்த நேரத்தில் எங்களுடைய முடிவு சரியானதாகவே இருந்தது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்" என கூறியுள்ளார்.

ஆதிரா

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

வியாழன் 13 ஜன 2022