மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

போகிக்கு எதைத் தொலைச்சே? அப்டேட் குமாரு

போகிக்கு எதைத் தொலைச்சே? அப்டேட் குமாரு

போகிக்கு என்னத்த தொலைச்சேனு கேட்டு அவளுக்கு மெசேஜ் பண்ணியிருந்தேன். ‘யார் இதுனு?’ கேட்டு ரிப்ளை அனுப்பியிருந்தா. ‘என்ன தெரியலையா? நேத்து வரைக்கும் உன் கூட பேசிக்கிட்டு இருந்தேனே?னு மறுபடியும் கேட்டேன். ‘அதான் பதிலை நீயே முதல்ல சொல்லிட்டியே... பை’ அப்படினு மெசேஜ் வந்துடுச்சு. இதுதான் ஆண்ட்ராய்டு போகியா?

நீங்க அப்டேட் பாருங்க

நாகராஜசோழன்.MA.MLA.

காவல் துறையால் தேடப்படும் எந்த ஒரு குற்றவாளிக்கும் பாஜகவில் இடம் இல்லை- அண்ணாமலை உறுதி

அண்ணே நீங்க சொன்னத கேட்டு அப்படியே சாக் ஆகிட்டேன்....

மயக்குநன்

இந்தியாவில் கொரோனா 3வது அலை பிப்ரவரி 1-15 தேதிக்குள் உச்சம் தொடும்!- சென்னை ஐஐடியின் முதல்கட்ட ஆய்வில் தகவல்.

இந்த வருஷம் 'வேலன்டைன்ஸ் டே'க்குப் பதிலா... 'க்வாரன்டைன் டே'தான் கொண்டாடணும் போல..?!

சரவணன். 𝓜

ஒருத்தன் தன்னோட வீட்டோட நாலு பக்கமும் தெற்கு திசையை பார்த்தவாறு கட்டினான். ஒரு நாள் ஜன்னல் வழியா பார்த்தப்போ, ஒரு கரடி தெரிஞ்சுது. அந்த கரடி என்ன கலரா இருக்க முடியும் ? ஏன் ?

மயக்குநன்

இனி காங்கிரஸ் எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரவே வராது!- குஷ்பு.

ஏன்... மறுபடியும் காங்கிரஸில் சேர பிளான் பண்ணிட்டீங்களா..?

கோழியின் கிறுக்கல்!

அமெரிக்கா வாழ் பிள்ளைகள் எந்த அறிவுரை கூறினாலும் இந்திய வாழ் பெற்றோரின் பதில்,

'அதை நீ இங்க வந்து என் கூட இருந்துட்டு சொல்லு' என்பதே!!

amudu

தேர்தல் அறிவித்த பின்பும் வெளிநாட்டு பயணத்தை நீட்டித்த ராகுல் காந்தி மீது காங்கிரஸார் அதிருப்தி.

ஏதாவது கிராம சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூப்பிட்டு பாருங்க. உடனே வருவாரு.

PrabuG

மருத்துவ கல்லூரி திறப்பில் என்னுடைய சாதனையை நானே முறியடித்து வருகிறேன் - பிரதமர்.

நகைக்கடை திறப்பு விழாவில் நயன்தாரா கூடதான் சாதனை பண்ணி இருக்காங்க.

ச ப் பா ணி

நாம் என்ன சேனல் பார்க்க வேண்டும் என்பதை ரிமோட்டை கையில் வைத்திருப்பவரே முடிவு செய்கிறார்

சரவணன். 𝓜

என் சாதனையை நானே முறியடித்து வருகிறேன்...

அது அநாவசியம், எத்தனை செங்கல்லுன்னு மட்டும் சொல்லுங்க..

amudu

நாம் தாமதமாக அலுவலகம் கிளம்பும் நாட்களில், நாம் கூட்ட நெரிசலான சாலைகளிலும், மேனேஜர் கூட்ட நெரிசல் இல்லாத சாலைகளிலும், பயணப்படவேண்டும் என்பதே விதி.

-லாக் ஆஃப்

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

வியாழன் 13 ஜன 2022