மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்: சுரேஷ் காமாட்சி

சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்:  சுரேஷ் காமாட்சி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே. சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் 'மாநாடு' திரைப்படம் 2021 நவம்பர் மாதம் வெளியானது. கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தம், பட வெளியீட்டிற்கு முந்தைய நாள் ரிலீஸ் நிறுத்தம் என அறிவித்து பின்பு குறித்த நாளிலேயே படம் வெளியானது என இந்த படத்திற்கு ஆரம்பம் முதல் பட வெளியீடு வரை நிறைய தடைகள் இருந்தது.

ஆனால் படம் வெளியான பின்பு அதன் கதைகளம், நடிகர்களது நடிப்பு, இசை, எடிட்டிங் என எல்லாவற்றிலுமே மக்களிடையே பரவலான பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றது.

தற்போது படம் வெளியாகி 50 நாட்கள் நிறைவடைந்ததை ஒட்டி படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், 'தொடக்கம் எப்படியானதாக இருந்தாலும் முடிவு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப 'மாநாடு' திரைப்படம் அழகான 50 நாட்கள் நிறைவை எட்டியுள்ளது. இது 100 நாட்களைச் சென்றடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த சிக்கலான காலகட்டத்தில் 50 நாட்கள் என்பதே நூறு நாட்களுக்கு இணையானது. இடையில் பல படங்கள் வெளியான போதும் 'மாநாடு' தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளது.

இதற்குக் காரணமாக இருந்து இரவு பகல் பாராமல் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றியை என் தாய் தந்தைக்குச் சமர்ப்பிக்கிறேன்' என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த அவர் தனது ஸ்பெஷல் நன்றி என சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவையும் குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் காமாட்சியின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ஆதிரா

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

வியாழன் 13 ஜன 2022