மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

கடவுள் ஆசிர்வதிப்பாராக: சித்தார்த்துக்கு சாய்னா பதில்!

கடவுள் ஆசிர்வதிப்பாராக: சித்தார்த்துக்கு சாய்னா பதில்!

ஆபாசமாக ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டதாக எழுந்த சர்ச்சையில் நடிகர் சித்தார்த் மன்னிப்புக் கோரிய நிலையில், அதை ஏற்றுக்கொண்டதாகக் கூறி பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் 'சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பாராக' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5ஆம் தேதி பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக ஃபெரோஸர் நகருக்குச் சென்றபோது பாதுகாப்பு குளறுபடி காரணமாக மீண்டும் டெல்லி திரும்பினார். இந்த விவகாரம் தொடர்பாக பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத் தானே பாதுகாப்பாக இருப்பதாகக் கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன் என்று சாய்னா தெரிவித்திருந்தார்.

சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்து நடிகர் சித்தார்த், "இறகுப் பந்து உலகின் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்" என்று தெரிவித்தார்.

இந்தப் பதிவை ஆபாசமான வார்த்தைகளால் அவரின் ட்விட்டரில் தெரிவித்ததாக கண்டனங்கள் எழுந்தன. கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி சிவசேனா ராஜ்ய சபா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, தமிழ் சினிமாவின் சின்மயி, பாஜக நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா போன்ற பல தரப்பும் வரிசைகட்டி நடிகர் சித்தார்த்துக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

மகாராஷ்ரா, தமிழ்நாடு காவல்துறை தலைவர்களுக்கு தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்து சித்தார்த் மீது வழக்கு பதியுமாறு அந்தக் கடிதங்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் நடிகர் சித்தார்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனவரி 12 அன்று இரவு வெளியிட்டார்.

அதில், "நான் பதிந்த முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் நகைச்சுவை என்று கருதி அந்த டிவீட்டைப் பதிவிட்டிருந்தாலுமே, அது நல்ல நகைச்சுவை அல்ல. சரியான கருத்தைக் கொண்டு சேர்க்காத அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்

சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக சாய்னா நேவால் தெரிவித்துள்ளார். அவரது பதிவில் "சித்தார்த் முதலில் என்னைப் பற்றி ஏதோ கூறினார். பின்னர் மன்னிப்பு கோரினார். அவர் சொன்னது எதற்கு வைரலானது என்பது தெரியவில்லை. அன்று ட்விட்டரில் டிரெண்ட் ஆனதைப் பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன். அவரின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், ஒரு பெண்ணை இதுபோன்று குறிவைத்து தாக்கக் கூடாது. சித்தார்த் உடன் நான் பேசியதில்லை. எனினும் அவர் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பாராக" என்று கூறியுள்ளார்.

-இராமானுஜம்

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

வியாழன் 13 ஜன 2022