மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

மூன்றாவது டெஸ்ட்: முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா!

மூன்றாவது டெஸ்ட்: முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் நாளிலேயே அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 223 ரன்கள் எடுத்துள்ளது.

கேப் டவுன் நியூலாண்டில் நேற்று (ஜனவரி 11) மதியம் 2 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்தப் போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல். ராகுல் 12, மயங்க் அகர்வால் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, விராட் கோலி ஜோடி நிதானமாக ஆடியது. புஜாரா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தவுடன் அடுத்து வந்த ரஹானே 9, ரிஷப் பண்ட் 27, அஸ்வின் 2, ஷர்துல் தாகூர் 12, பும்ரா 0, முகமது சமி 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

நிதானமாக ஆடி, சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 201 பந்துகள் ஆடி 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ் 4 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா 4, மார்கோ ஜேன்சன் 3, ஆலிவியர், நிகிடி, கேஷவ் மகராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் 3 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்கனுடன் ஜோடி சேர்ந்த மகராஜ் 6 ரன்களுடனும் மார்கன் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட்டு இழப்பு 17 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய (ஜனவரி 12) ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் எடுக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும் என்பதால் ஆட்டத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

-ராஜ்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

புதன் 12 ஜன 2022