மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

அடுத்த டாக்டர்?: அப்டேட் குமாரு

அடுத்த டாக்டர்?: அப்டேட் குமாரு

ஐசரிகணேஷ் மாதிரி நம்மூர்ல ஒரு ஆளு கூட இல்லையேன்னு மும்பை சினிமா உலகமே ராத்திரி பூரா புலம்பிக்கிட்டே இருக்குனு நம்ம டைரக்டர் நண்பன் சொன்னான்.

சிம்புக்கு டாக்டர் பட்டம் கொடுத்த பொறாமையான்னு கேட்டேன்.

ஆமாம்னு தலையாட்டினான்.

அடப்போடா கூடிய சீக்கிரம் அமெரிக்காவே அலரப்போகுது சண்முகம் சன்னிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப் போறாருன்னு சொன்னேன்.

அவன் குப்பறக்கப்படுத்துட்டான் நீங்க அப்டேட்டைப்பாருங்க...

balebalu

சிட்டி முழுக்க இப்போ "ஓய் பிளட் சேம் பிளட்" மோட் ல தான் எல்லாரும் சுத்திக்கிட்டு இருக்கோம் Grinning face

-OmicronVariant

ச ப் பா ணி

ஷோ ரூமில் இருந்ததை விட, வீட்டு பீரோவில் இருந்ததே அதிகம்

-ஆண்களின் ரிசப்சன் கோட்டுகள்

மயக்குநன்

சென்னை வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ரூ.1,000 கோடி ஒதுக்கீடு!- முதல்வர் ஸ்டாலின்.

இதுக்கு முன்னால ஒதுக்கியதை எல்லாம் 'ஒதுக்கிட்டாங்க' போல..?!

ச ப் பா ணி

"எனக்கு தெரியாது" என்பதே உலகின் மிகச்சிறந்த தற்காப்பு கலை

நாகராஜசோழன்.MA.MLA

பொங்கல் தொகுப்பு புளி ல பல்லி இருந்தத கூட டன் கணக்குல வாங்குரோம் எங்கேயோ தெரியாம விழுந்திருக்கும் சொல்லி விடலாம்,

ஆனா புகார் சொன்னவன் மேல கேஸ் போட்டு, அவர் பையனை சாகடிசீங்க பாருங்க அதை தாண்ட ஏத்துக்க முடியல....

மயக்குநன்

உலகிலேயே முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!- செய்தி.

ஆகா... இதுவல்லவோ 'pig' அச்சீவ்மென்ட்..?!

ச ப் பா ணி

நாம் என்ன சேனல் பார்க்க வேண்டும் என்பதை ரிமோட்டை கையில் வைத்திருப்பவரே முடிவு செய்கிறார்

mohanram.ko

கொரோனா பரவலை தடுக்க 14 முதல் 18 வரை வழிபாட்டு தலங்களை திறக்க தடை

அது தெரிஞ்சி தான் நாங்க, இவ்வளவு கூட்டத்திலேயும் இன்னைக்கே கோயிலுக்கு வந்துட்டோம்

ஷேக்பரித்

parents : கல்யாணத்துக்கு முக்கியம் மண்டபம் பெருசா இருக்கனும்

சாப்பாடு தட புடலா இருக்கனும்.

மாப்பிள்ளை : எதுவுமே முக்கியம் இல்லடா, அடுத்த lockdown போடுறதுக்குள்ள கல்யாணத்த பண்ணி வைங்கடா.

மயக்குநன்

மக்களுக்கு எதிராக எதாவது நடந்தால் அதிமுக குரல் கொடுக்கும்!- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

அதாவது... அதிமுகவுக்கு எதிரா ரெய்டு நடக்கும்போது மக்கள் குரல் கொடுக்கணும்னு சிம்பாலிக்கா சொல்றாரு போல..?!

சரவணன். 𝓜

முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் - டாஸ்மாக் நிர்வாகம்!

அப்ப மாஸ்க் போட்டுக்கிட்டு வந்து காசு இல்லாம கேட்டா கூட தருவீங்க.. அப்படித்தானே?

கோழியின் கிறுக்கல்!!

ஹோட்டலுக்கு போனா நமக்கு சம்பந்தமே இல்லாத சர்வர் கூட இன்னோரு தோசை சாப்பிடுங்கனனு சொல்வாரு,

ஆனா வீட்டில!?

-லாக் ஆஃப்

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

புதன் 12 ஜன 2022