மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

‘சியான் 61’ கதை என்ன?

‘சியான் 61’ கதை என்ன?

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இது நடிகர் விக்ரமின் 61வது படமாகும்.

இந்த படத்தினை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இரஞ்சித் மற்றும் விக்ரம் முதல் முறையாக இணைவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகம் உள்ளது. தற்போது இந்த கதை குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி இயக்குநர் இரஞ்சித் ‘மெட்ராஸ்’ படத்திற்கு முன்பே எழுதிய கதை இது என்றும் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் வரும், இந்த கதை கோலார் தங்க வயல் தொடர்புடையதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இயக்குநர் இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படப்பிடிப்பு சமீபத்தில்தான் நிறைவடைந்தது. இதில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி கிருஷ்ணன், ‘சார்பட்டா பரம்பரை’ டான்சிங் ரோஸ் புகழ் ஷபீர் ஆகியோர் நடிக்கின்றனர்.

இன்னொரு பக்கம் நடிகர் விக்ரமும் அவரது ‘கோப்ரா’ படப்பிடிப்பை முடித்து விட்டார். மேலும் விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்த ‘மகான்’ திரைப்படமும் இந்த மாதம் 26ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படமும் தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் இருக்கிறது.

எனவே, விரைவில் இரஞ்சித் விக்ரம் இணையும் ‘சியான்61’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆதிரா

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

புதன் 12 ஜன 2022