மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடக்கும் தொடரைக் கைப்பற்றப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (ஜனவரி 11) இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது.

இதையொட்டி இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். முதுகுவலியால் இரண்டாவது டெஸ்டில் ஆடாத இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் கடைசி டெஸ்டில் அவர் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான கேப்டவுன் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது கிடையாது. இந்தியா இங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றில் தோல்வியும் இரண்டில் டிராவும் கண்டுள்ளது.

இதில் 2018ஆம் ஆண்டு நடந்த டெஸ்டில் 208 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 135 ரன்னில் சுருண்டு தோற்றதும் அடங்கும். இதேபோல் பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா நான்கு டெஸ்டுகளில் விளையாடி அனைத்திலும் தோற்று இருக்கிறது.

முதல் டெஸ்டில் ‘தென்னாப்பிரிக்காவின் கோட்டை’ என்று வர்ணிக்கப்பட்ட செஞ்சூரியனில் இந்தியா முதன்முறையாக அந்த அணியைத் தோற்கடித்து வரலாறு படைத்தது. வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது டெஸ்டில் தோல்வியடைந்தது. கேப்டவுனில் இன்று நடக்கும் மூன்றாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைக்குமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

கேப்டவுனில் இந்திய தரப்பில் சச்சின் தெண்டுல்கர் (2 முறை), வாசிம் ஜாபர், முகமது அசாருதீன் ஆகியோர் சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

செவ்வாய் 11 ஜன 2022