மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

அடுத்த படத்துல மெலிஞ்சிடுமா?: அப்டேட் குமாரு

அடுத்த படத்துல மெலிஞ்சிடுமா?: அப்டேட் குமாரு

என்னப்பா ரொம்ப நேரமா வருத்தமா உட்கார்ந்திருக்கேனு நம்ம பக்கத்து கடை பையன்கிட்டே கேட்டேன். ‘அண்ணே... இப்பதான் நியூஸ்ல பாத்தேன். த்ரிஷாவுக்கு கொரோனாவாம், குஷ்புவுக்கு கொரோனாவாம். படிச்சதுலேர்ந்து மனசே சரியில்லைண்ணே. த்ரிஷா ஏற்கனவே ஒல்லியாதான் இருக்கும். இனிமே அடுத்த படத்துல இன்னும் மெலிஞ்சுடுமாண்ணே’னு கேட்குறான். நாட்ல அவனவன் ஊரடங்கு வந்தா அடுத்த வேளை சோத்துக்கு என்ன பண்றதுன்னு பதறிகிட்டிருக்கான். ஆனா இவனை மாதிரி ஆளுங்க என்னடன்னா இப்படி பண்ணிக்கிட்டிருக்கானுங்க. இதுக்குன்னே இன்னும் ரெண்டு மூணு அலை வந்தாலும் பரவாயில்லைனு தோணுது மக்களே...

நீங்க அப்டேட் பாருங்க

விடியலைத்தேடி

EMI ல் சிக்கிய வாடிக்கையாளரும்,

ICU ல் சிக்கிய நோயாளிகளும்

அவ்வளவு எளிதில் மீண்டு வர இயலாது.

பர்வீன் யூனுஸ்

எப்பவும் பேசிகிட்டிருந்தா அது சீமான்.. எப்போதாவது பேசினா அது ஜி.கே. வாசன்.

amudu

கணவர் போட்டு தருவது காபி, டீ, ஜூஸ் எதுவென்றாலும், அது மனைவிக்கு "பூஸ்ட்" தான்.

மயக்குநன்

தற்போது தமிழகத்தில் 'பொய்மை' அரசுதான் நடந்து கொண்டிருக்கிறது!- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

இதுக்கு முன்னால 'பொம்மை' அரசு நடந்துக்கிட்டு இருந்த மாதிரியா..?!

amudu

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி. -முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அந்த முற்றுப்புள்ளி, மீண்டும் கமா ஆகாதவாறு வைங்க தலைவரே.

balebalu

அம்மா அப்பா பெயர் சேர்ந்து வர்ற மாதிரி குழந்தைக்கு பெயர் வைப்பது இப்போ பேஷன் .

'வைரஸ்' க்கும் அது மாதிரி ஆரம்பிச்சுட்டாங்க Grinning face

-Deltacron

நாகராஜசோழன்.MA.MLA

சென்னை வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ரூ.1,000 கோடி ஒதுக்கீடு!- முதல்வர் ஸ்டாலின்.

இதுல 10% ஆளும்கட்சி ஆளுக ஒதுக்காமா இருந்தா நல்லா இருக்கும் சார் ...

PrabuG

உங்க வீட்டுலதான்டா இதுக்கு பேரு லாக்டவுனு.

எங்க வீட்டுல இதுக்கு பேரு பொங்கலுக்காக ஒட்டடை அடிக்கும் நாள்...

ச ப் பா ணி

பேசியல் செய்த பெண்களுக்கும்,

ஷேவிங் செய்த ஆண்களுக்கும்,

அழகாகி விட்டோம் என்ற கர்வம் ஐந்து நிமிடம் தோன்றி மறைகிறது

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

லாக்-டவுன்களுக்கு அடுத்து வரும் திங்கட்கிழமைகளை சமாளிப்பதற்கு என தனியாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்..

மயக்குநன்

நாடு முழுவதும் 150 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை!- பிரதமர் மோடி பெருமிதம்.

பஞ்சாப்லதான் 'எதிர்ப்பு சக்தி' அதிகமாயிடுச்சு போல..?!

- லாக் ஆப்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

செவ்வாய் 11 ஜன 2022