மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

ஓய்வை அறிவித்த கிறிஸ் மோரிஸ்

ஓய்வை அறிவித்த  கிறிஸ் மோரிஸ்

தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அனைத்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்காக 2012ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் அறிமுகமானார் கிறிஸ் மோரிஸ். கடந்த 8 ஆண்டுகளில் 69 போட்டிகளில் 774 ரன்களும், 94 விக்கெட்களையும் வீழ்த்தி, பெஸ்ட் ஆல்-ரவுண்டராக இருந்து வந்தார். 4 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 23 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காகவும் கிறிஸ் மோரிஸ் விளையாடி இருக்கிறார். 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அனைத்து அணிகளும் இவரை வாங்கப் போட்டிப் போட்டன. அப்போது, கிறிஸ் மோரிஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. இதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக, ரூ. 16 கோடிக்குத் தேர்வான யுவராஜ் சிங்கின் சாதனையை இவர் முறியடித்தார். 2022 ஐபிஎல் போட்டியிலும் அவருக்கு சுட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையே 3ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். எனது பயணத்தில் பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அதில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி.. இது ஒரு வேடிக்கையான பயணம். பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வைத் தொடர்ந்து அவர், தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் அணியான டைட்டான்ஸுக்கு பௌலிங் கோச்சாகச் செயல்படப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

செவ்வாய் 11 ஜன 2022