மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

தனுஷ் படத்தில் இருந்து விலகிய நாயகி: உண்மை என்ன?

தனுஷ் படத்தில் இருந்து விலகிய நாயகி: உண்மை என்ன?

நடிகர் தனுஷ் முதன் முறையாக தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகும் படம் ‘வாத்தி’. தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. அந்த படத்தின் வீடியோ மற்றும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. கல்லூரி பேராசிரியர் கதாப்பாத்திரத்தில் தனுஷ் முதன் முறையாக நடிக்கிறார்.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான வெங்கட் அட்லூரி இந்த படத்தை இயக்குகிறார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கல்வி தனியார்மயமாதல் மற்றும் கல்வியின் பெயரால் நடக்கும் மோசடிகள் ஆகியவை குறித்தான படமாக இது அமையும் எனவும் தகவல் வெளியானது. தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ஆனால் தற்போது படத்தில் இருந்து சம்யுக்தா மேனன் விலகி இருப்பதாகவும், அவருக்கு பதிலாக ‘பேச்சுலர்’ புகழ் திவ்யபாரதி நடிப்பார் எனவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

ஆனால், இது முற்றிலும் பொய் செய்தி எனவும் சம்யுக்தா மேனனே ‘வாத்தி’ படத்தின் கதாநாயகி என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘வாத்தி’ படம் தவிர ஹாலிவுட் படமான ‘தி க்ரேமேன்’, தமிழில் ‘மாறன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் தனுஷ். இதில் ‘மாறன்’ ஓடிடியில் வெளியாகும் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

ஆதிரா

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

செவ்வாய் 11 ஜன 2022