மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

பட்டம் பெறத் தாய் தந்தைதான் காரணம்: ‘டாக்டர்’ சிம்பு

பட்டம் பெறத் தாய் தந்தைதான் காரணம்: ‘டாக்டர்’ சிம்பு

நடிகர் சிலம்பரசனுக்கு சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் இன்று (ஜனவரி 11) ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்பட்டது.

டாக்டர் பட்டம் பெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிம்பு, “இதற்கு முக்கிய காரணம் எனது தாய் தந்தைதான். அவர்கள் தான் என்னை 9 வயதுக் குழந்தையாக இருந்த போதிலிருந்தே நடிக்க வைத்தார்கள். மேலும், இந்த பட்டம் பெறக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

திரைத்துறை கலைஞர்களுக்கு வருடந்தோறும் உலகிலுள்ள முன்னணி கல்வி நிறுவனங்கள் 'கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விஜய், விக்ரம் ஆகியோர் டாக்டர் பட்டம் பெற்றிருக்கின்றனர்

இதனையடுத்து தற்போது நடிகர் சிம்புவுக்குச் சென்னையிலுள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. ‘சிறுவயதிலிருந்தே நடிப்பு, பாடல், இசை, இயக்கம் என பல துறைகளிலும் நடிகர் சிம்பு சிறந்து விளங்கி வருவதால் இந்த பட்டம் அவருக்கு வழங்கி கவுரவிக்கப்படுகிறது’ என விழாவில் தெரிவித்தனர். நடிகர் சிம்புவுடன் அவரது டி.ஆர். ராஜேந்திரன் மற்றும் உஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட நிலையில், அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் ‘டாக்டர் சிலம்பரசன்’ என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் சிலம்பரசனுடன் விஜிபி குழும தலைவர் சந்தோசம் மற்றும் தடகள வீரர் மாரியப்பன் ஆகியோருக்கும் ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நடிகர் சிம்புவுக்கு கொடுக்கப்பட்ட டாக்டர் பட்டத்திற்கும் அவர் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடிப்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என வேல்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஐசரி. கே. கணேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தார்.

‘மாநாடு’ படத்தைத் தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு', 'பத்துதல', 'மஹா', 'கொரோனா குமார்' உள்ளிட்ட படங்களை நடிகர் சிம்பு தற்போது கைவசம் வைத்துள்ளார்.

ஆதிரா

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

செவ்வாய் 11 ஜன 2022