மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

'குக் வித் கோமாளி' சீசன்3: போட்டியாளர்கள், கோமாளிகள் யார் யார்?

'குக் வித் கோமாளி' சீசன்3: போட்டியாளர்கள், கோமாளிகள் யார் யார்?

ரசிகர்களால் அதிகம் வரவேற்பு பெற்ற 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான புரோமோ வீடியோவை கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்திருந்தது.

நிகழ்ச்சியின் நடுவர்களான செஃப் தாமு, வெங்கடேஷ் பட், கோமாளிகள் சிவாங்கி, மணிமேகலை, சுனிதா, பாலா ஆகியோர் இடம்பெற்றிருக்க புகழ் மட்டும் அதில் காணவில்லை. புகழ் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இந்த சீசனில் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மேலும் அந்த புரோமோவின் இறுதியாக புகழ் குரலில் 'இது குக் வித் கோமாளி; முடிஞ்சா சிரிக்காம சமாளி' என முடிந்திருக்கும். இதனால் இந்த சீசனில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வாரா என்ற உறுதிப்படுத்த படாத செய்தியும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

தற்போது நிகழ்ச்சியின் ஷூட் தொடங்கியுள்ள நிலையில் யார் யார் இந்த சீசனில் குக், புது கோமாளிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாசன், பின்னணி பாடகி கிரேஸ் கருணாஸ், 'சார்பட்டா பரம்பரை' படம் மூலம் பிரபலமான நடிகர் சந்தோஷ் பிரதாப், காமெடியன் மனோபாலா, நடிகை வித்யுலேகா ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். மேலும் முந்தைய சீசனின் டைட்டில் வின்னரான கனியின் தங்கையும் நடிகையும் 'சர்வைவர்' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான விஜியலக்‌ஷ்மியும் இதில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, பாலா ஆகியோரோடு இந்த மூன்றாவது சீசனில் புதுக்கோமாளிகளாக 'சூப்பர் சிங்கர்' புகழ் மூக்குத்தி முருகன், அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர் பரத், குரேஷி ஆகியோரும் பங்கேற்க இருக்கின்றனர்.

-ஆதிரா

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

செவ்வாய் 11 ஜன 2022