Kதிலீப் கைது செய்யப்படுவாரா?

entertainment

கடந்த 2017ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட நடிகை பாவனாவை மர்ம நபர்கள் கடத்தி சென்று பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கினர். இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பாலியல் வன்முறைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்ட திலீப் 84 நாட்கள் கழித்து ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக திலீப்பின் நண்பரும் இயக்குனருமான பாலசந்திர குமார் கொடுத்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவில், சத்தம் போதாது என்று அந்த வீடியோவை ஸ்டூடியோவில் கொடுத்து 20 மடங்கு சத்தத்தை உயர்த்தி திலீப் கேட்டு மகிழ்ந்ததாகவும், விசாரணை அதிகாரியை லாரி ஏற்றி கொல்ல குடும்ப உறுப்பினர்களுடன் திட்டமிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இதை தொடர்ந்து திலீப், அவரது சகோதரர் அனூப், மைத்துனர் சூரஜ், அப்பு, பாபு உள்பட 6 பேர் மீது கொலை மிரட்டல் மற்றும் விசாரணையை சிதைக்கும் பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் போதிய ஆதாரமில்லை என திலீப் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாக்குமூலமும், வழக்கும் திலீப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இந்த புதிய வழக்கு தொடர்பாக தான் கைதாகலாம் என்பதால் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற மனு தாக்கல் செய்துள்ளார் திலீப்.

**அம்பலவாணன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *