மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

மன அழுத்தம்- நண்பர்களால் மீண்டு வந்தேன்: சமந்தா

மன அழுத்தம்- நண்பர்களால் மீண்டு வந்தேன்: சமந்தா

தன் சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகள் தந்த மன அழுத்தத்தில் இருந்து நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களாலே மீண்டு வந்தேன் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை சமந்தா ஹைதராபாத்தில் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் நடத்தப்பட்ட ‘Psychiatry at your doorstep’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டார். அதில், பேசிய சமந்தா விவாகரத்து, தன்மீதான தவறான கருத்துகள், அதுபோன்ற கடினமான சமயங்களில் மன அழுத்ததில் இருந்து மீண்டு வந்தது குறித்து பேசினார்.

“மனதளவில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது கடினமான சமயம் என்றாலோ உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் உதவி கேட்க எந்த ஒரு தயக்கமும் கொள்ள தேவையில்லை. எனக்கு அதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்ட போது, என்னுடைய நண்பர்கள் மற்றும் ஆலோசகர்கள் வழிக்காட்டுதலிலேயே அதில் இருந்து மீண்டு வந்தேன். இதுபோன்று மனநல மருத்துவர்களிடம் ஆலோசனைக்கு செல்வது என்பது நிச்சயம் இயல்பான ஒரு செயலாக இருக்க வேண்டும். சாதாரண காய்ச்சல், இருமல் வந்தால் எப்படி நாம் மருத்துவரை சென்று பார்க்கிறோமோ அதுபோல, நம் மனதுக்கு கடினமான சமயத்திலும் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.

என் வாழ்வின் அடுத்த கட்டத்தில் நான் வெற்றி பெறுகிறேன் என்றால் அதற்கு காரணம் நான் உறுதியானவள் என்பது மட்டும் காரணம் அல்ல, அந்த உறுதியை என்னை சுற்றியுள்ள பலரும் எனக்கு கொடுத்துள்ளார்கள்” என தெரிவித்தார்.

சமந்தா போன்ற பிரபலங்கள் மனநலம் குறித்து பொதுவெளியில் இதுபோன்று பேசும்போது பலருக்கும் நிச்சயம் மனநலம் குறித்த விழிப்புணர்வு உருவாகும் மற்றும் அது குறித்தான தேவையில்லாத தவறான எண்ணங்கள் நீங்கும் என சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

ஆதிரா

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

திங்கள் 10 ஜன 2022