மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

'வலிமை' க்கு பின் வில்லனாகும் அஜித்

'வலிமை' க்கு பின் வில்லனாகும் அஜித்

ஓமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளதால் இந்த மாதம் பொங்கல் விடுமுறையை ஒட்டி 13ம் தேதி வெளியாக இருந்த நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்படம் தேதி குறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 'நேர் கொண்ட பார்வை' படத்திற்கு பிறகு இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் இணையும் இரண்டாவது படம் இது. 'வலிமை'க்கு பிறகு அஜித்தின் 61ஆவது படத்தையும் போனி கபூர் தயாரிக்க ஹெச். வினோத்தே இயக்குகிறார்.

தற்போது 'அஜித் 61' படம் குறித்தான சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த வருடம் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த கதைக்கான முன் தயாரிப்பு (Pre Production) பணிகள் தற்போது நடந்து வருகிறது. அஜித்திற்கான வலுவான கதைக்களமாக அமைத்துள்ள இயக்குநர் ஹெச். வினோத் கதையில் எதிர்மறை தன்மையும் இருக்கும் என சமீபத்திய பேட்டிகளில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அஜித் இதில் வில்லனாகவும் நடிப்பார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நடிகர் அஜித் இதற்கு முன்பு 'மங்காத்தா', 'வரலாறு', 'பில்லா', 'வாலி' ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார்.

கொரோனா காரணமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு , வெளியீடு என தள்ளி போயுள்ளது. சூழ்நிலை சரியாக அமைந்தால் திட்டமிட்டபடி 'அஜித்61' மார்ச் மாதம் 9ல் இருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள் படக்குழு தரப்பில். இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

திங்கள் 10 ஜன 2022