மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

மெளனம் கலைத்த ஜாக்குலின் பெர்ணாண்டஸ்

மெளனம் கலைத்த ஜாக்குலின் பெர்ணாண்டஸ்

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாகக் கூறி இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன.

அ.தி.மு.க. பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி.தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

அவர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை, பெங்களூரு பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ.82.5 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக அவரது காதலி லீனா மரியாவிடமும், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மீண்டும் வெளியானது.

ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் பல ஆடம்பர பரிசுப் பொருட்கள் வாங்கிக்கொடுத்ததாக அமலாக்கத்துறையின் விசாரணையில் தெரிய வந்தது. இதற்கு முன்பு இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியானபோது ஜாக்குலின் தரப்பில் எந்தவித விளக்கமும் கொடுக்கப்படாமல் இருந்தது.

ஆனால் தற்போது நடிகை ஜாக்குலின் தனது புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாவது குறித்து முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “நாடும், நாட்டு மக்களும் எனக்கு அதிகப்படியான அன்பையும், மரியாதையையும் கொடுத்திருக்கின்றனர். நான் இப்போது கடினமான பாதையை கடந்து கொண்டிருக்கிறேன். இதை எனது நண்பர்களும், ரசிகர்களும் அறிவார்கள் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடன் எனது தனியுரிமை மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்புக்குறியவர்களுக்கு இதை நீங்கள் செய்ய மாட்டீர்கள். எனக்கும் இதை செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நீதி வெல்லும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு கையெடுத்து கும்பிடுவது போன்ற படத்தையும் வைத்துள்ளார்.

சுகேஷ் சந்திரசேகரும் தனக்கு ஜாக்குலினுடன் நெருங்கிய நட்பு இருந்தது என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஜாக்குலினிடம் பல முறை விசாரணை நடத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அவரை வெளிநாடு செல்ல விடாமல் தடுத்துவிட்டனர். ஜாக்குலின் தாயார் வெளிநாட்டில் இருக்கிறார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரைக்கூட சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பலவாணன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

ஞாயிறு 9 ஜன 2022