மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

ஊரடங்காவது வாயடங்காவது: அப்டேட் குமாரு

ஊரடங்காவது வாயடங்காவது: அப்டேட் குமாரு

காசிமேட்ல மீன் வாங்க வந்த கூட்டத்தைப் பாத்தியாப்பானு கேட்டாரு பக்கத்து பிளாட் அண்ணன். ஆமாண்ணே ரெண்டாவது அலையிலயே நான் நாலஞ்சு கிலோ வாங்கிட்டு வந்து ஃபிரிட்ஜ்ல வச்சி சாப்பிட்டேன்னு எதிர் பிளாட் அங்கிள் பந்தா பண்ணிக்கிட்டாரு. ஒரு ஞாயித்துக் கெழமை மீன் திங்க முடியாம இருக்க முடியலைன்னா... அப்புறம் நாமெல்லாம் என்ன மனுசன்... ஊரடங்கை விட முதல்ல ஒவ்வொருத்தரும் தனக்குத் தானே வாயடங்கு போட்டுக்கணும்யா அப்பதான் இதெல்லாம் கட்டுப்படுத்த முடியும்னு நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ள மீன் கொழம்பை ஒரு பாத்திரத்துல வச்சி கொண்டுவந்து கொடுத்தாங்க பக்கத்து வீட்டு அண்ணி...

ஊரடங்காவது வாயடங்காவது நீங்க அப்டேட் பாருங்க.

சரவணன். 𝓜

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரைப் பார்க்க தேவையில்லைன்னு சொல்வாங்க..

ஆனா யதார்த்தம் என்னன்னா தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கன்னு சொல்றதே டாக்டர் தான்..

PrabuG

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஒரே நாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை -செய்தி.

தீபாவளி, பொங்கல் மாதிரி ஊரடங்கையும் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க போல.

ℳ𝐬𝐝彡இதயவன்

சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும் செயற்கை சூரியனை உருவாக்கி சீனா சாதனை ~

கொரோனா ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆனதும் தன்னம்பிக்கை கூடிருச்சு ல உனக்கு?!

செங்காந்தள்

உண்மையான விலையைச் சொல்லி விற்பவர்களை விட, அதிக விலை சொல்லி விலையைக் குறைப்பவர்களையே பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்கிறது...!!!

நாகராஜசோழன்.MA.MLA

நீட் தேர்வு 12 ஆண்டு பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக்குகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

என்னை மீறி எப்படி நீட் தேர்வை ரத்து செய்யராங்கன்னு பாக்கிறேன்.- இப்படிக்கு நளினி சிதரம்பம்.

கடைநிலை ஊழியன்

கேமராக்கள் அழகாக புகைப்படம் எடுக்க வளர்ந்து கொண்டே வருகிறது. நம் முகம் என்னவோ வளர வளர சுமாராகி கொண்டே போகிறது !!

balebalu

கொடி அசைந்ததும் காற்று வந்ததா

காற்று வந்ததும் கொடி அசைந்ததா

எலக்க்ஷன் வந்ததும் கொரோனா அலை வந்ததா

அலை வந்ததும் தேதி வந்ததா

ச ப் பா ணி

லாக்டெளனில் அதிகம் வேலை செய்வது swiggy,zomato ஊழியர்களே

தர்மஅடி தர்மலிங்கம்

நீட் விஷயத்தில் பின்வாங்க மாட்டோம் - முதல்வர் ஸ்டாலின்!

மத்திய அரசும் பின்வாங்கற மாதிரி தெரியலையே.?!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

எதுக்கு ஒரு வாரமா தினம் ஒரு புது காலண்டர் வாங்கிட்டு வந்துட்டு இருக்கீங்க..?

நீ தான டெய்லி காலண்டர் வாங்கிட்டு வர சொன்ன.

மயக்குநன்

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும்!- முதல்வர் ஸ்டாலின்.

ஏன்... நொடியில் ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி சொல்லலியா தலைவரே..?!

கோழியின் கிறுக்கல்!!

சின்ன பையனா இருக்கும் போது அம்மா கிட்ட எந்த ஒரு பிரச்சனையை எடுத்துட்டு போனாலும்,

'நீ என்ன பண்ண?' என்பதே முதல் கேள்வியாக வரும்.

ஏன்னா, நம்ம மேல இருந்த நம்பிக்கை அவ்வளவு தான்!!

-லாக் ஆஃப்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

ஞாயிறு 9 ஜன 2022