மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

லால் சிங் சட்டா: சிறப்புக் காட்சியை திரையிடும் அமீர்கான்

லால் சிங் சட்டா: சிறப்புக் காட்சியை திரையிடும் அமீர்கான்

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் நடிப்பில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதை பெற்ற ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தினை அதிகாரபூர்வமாக ‘லால் சிங் சட்டா’வாக ரீமேக் செய்துள்ளார் நடிகர் அமீர்கான்.

அதனால் ஆங்கிலப் படத்தில் நடித்த டாம் ஹாங்ஸை சந்தித்து ‘லால் சிங் சட்டா’ படத்தின் சிறப்புக் காட்சியை நடிகர் அமீர்கான் திரையிடவுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன், அமீர்கான் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். அமீர்கானின் நண்பராக நாக சைதன்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கரீனா கபூர், மோனா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ‘லால் சிங் சட்டா’ வெளியாகிறது. இதே தேதியில் யஷ் - பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’ படமும் வெளியாகிறது.

இந்த நிலையில், பாரஸ்ட் கம்ப்படத்திற்காக சிறந்த நடிப்புக்காக ஆஸ்கர் விருதினை வென்ற டாம் ஹாங்ஸுக்கு அமெரிக்கா சென்று ‘லால் சிங் சட்டா’வின் சிறப்புக் காட்சியினை அமீர்கான் திரையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் டாம் ஹாங்ஸ் சிறந்த நடிப்புக்காக இதுவரை இரண்டுமுறை ஆஸ்கர் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

ஞாயிறு 9 ஜன 2022