மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 ஜன 2022

முதல் நீ முடிவும் நீ ரிலீஸ் தேதி!

முதல் நீ முடிவும் நீ ரிலீஸ் தேதி!

இசையமைப்பாளர் தர்புகா சிவா ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் இயக்குநராக தனது பயணத்தை துவங்கியுள்ளார்.

சூப்பர் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சமீர் பாரத் ராம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில், அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், கே.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ் சிஎஸ்வி, ஹரினி ரமேஷ், கிஷன் தாஸ் உட்பட இளம் நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை எழுதி இயக்குவதுடன், இயக்குநர் தர்புகா சிவா இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். ஒளிப்பதிவு – சுஜித் சாரங்.

“முதல் நீ முடிவும் நீ” திரைப்படம், இன்றைய இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்ட மென்மையான டிராமாவாக உருவாகியுள்ளது.

வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியை பெறுவது பற்றியான கதைக் கருவில் இப்படம் உருவாகியுள்ளது. சென்னையில் 90 களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது.

அந்த இளைய சமுதாய சிறுவர்களின் மனவெளியைப் பிரதிபலிப்பதுடன், அந்தக் காலத்தின் மன நிலையையும் படம் பிடித்துக் காட்டுகிறது. பின்னர் கதை வேறொரு இடத்திற்கு நகர்ந்து, வாழ்க்கையின் தேடல்களையும், நோக்கத்தையும் அடைவது குறித்தான மையக் கருப் பொருளை கொண்டுள்ளது என்கிறார் இயக்குனர் தர்புகசிவா

‘நியூயார்க் திரைப்பட விருது விழாவில், இந்த ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் சிறப்பு மிகு கௌரவ விருதை வென்றுள்ளது. மேலும், மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலிம் விருது விழாவினில் இத்திரைப்படம் ‘சிறந்த இயக்குநர்’ விருதினையும் வென்றுள்ளது.

ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் முக்கிய அம்சமாக இசை கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தின் இசைப் பாடல்கள், ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக, சித் ஸ்ரீராம் குரலில், பாடலாசிரியர் தாமரை எழுதிய இப்படத்தின் டைட்டில் பாடல், பல்வேறு வானொலி நிலையங்களின் தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.இப்படம் வரும் ஜனவரி 21, 2022 அன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

-அம்பலவாணன்

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

சனி 8 ஜன 2022