மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 ஜன 2022

அரசியல் தொண்டர்களை பற்றி பேசும் 'சமுத்திரக்கனியின் பப்ளிக்’!

அரசியல் தொண்டர்களை பற்றி பேசும் 'சமுத்திரக்கனியின் பப்ளிக்’!

சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு சமுத்திரக்கனியின் பப்ளிக் என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை இன்று வெளியாகியிருக்கிறது. இதனை விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்து வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் ரா.பரமன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் சமுத்திரக்கனியின் பப்ளிக். இதில் நடிகர் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் காளி வெங்கட் மற்றும் நடிகை ரித்விகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ராஜேஷ் யாதவ் மற்றும் வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், “தமிழ் திரை உலகில் அரசியலை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்களை பற்றிய திரைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. முதன்முறையாக அரசியல் கட்சியில் பணியாற்றும் தொண்டர்களை பற்றிய படமாக 'சமுத்திரக்கனியின் பப்ளிக்' உருவாகி இருக்கிறது’ '' என்றார்.

இராமானுஜம்

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

சனி 8 ஜன 2022