மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 ஜன 2022

சிட்னி பைய்டியர் மறைவு: நடிகர் பார்த்திபன் இரங்கல்!

சிட்னி பைய்டியர் மறைவு: நடிகர் பார்த்திபன் இரங்கல்!

பிரபல ஹாலிவுட் நடிகர் சிட்னி பைய்டியர் (94) நேற்று காலமானார். கறுப்பினத்தை சேர்ந்த சிட்னி பைய்டியர் தனது நடிப்பு திறமையால் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார். கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான ‘லிலிஸ் ஆஃப் தி பில்ட்’ படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது சிட்னி பைய்டியருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆஸ்கர் வென்ற முதல் கறுப்பின நடிகர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் நடிகர் சிட்னி பைய்டியர் (94) நேற்று (ஜனவரி 7) வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிட்னி பைய்டியர் மறைவுக்கு நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில், " சிட்னி பைய்டியர் கருப்பின நடிகர்களில் ஆஸ்கர்-தொட்டவர். வியாபார சந்தைக்குள் சமரசம் கொள்ளாமல் கௌரவமான பாத்திரங்களில் (அன்றைய கருப்பின மக்கள் வெள்ளைகளின் அடிவருடிகளாக இருந்தபோது) முத்திரை பதித்தவர் பெருமை, ஆயிரம் மைல்கள் கடந்து என்னை போல் ஒரு தமிழ் மாநிறத்தவன் இரங்கல் பதிவிடுவது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அம்பலவாணன்

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

சனி 8 ஜன 2022