மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 ஜன 2022

வெளியானது கேஜிஎஃப் 2 ரிலீஸ் தேதி!

வெளியானது கேஜிஎஃப் 2 ரிலீஸ் தேதி!

2022 ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை திருநாள் அன்று கேஜிஎஃப் 2 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள கேஜிஎஃப் 2 பாகத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கேஜிஎஃப் படத்தின் கதாநாயகன் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் டீசர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியாகி இருந்தது. 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இந்திய அளவில் சாதனை படைத்தது.

இந்நிலையில் நாயகன் யாஷின் பிறந்தநாளான இன்று கேஜிஎஃப் 2 திரைக்கு வரும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சித்திரை திருநாள் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம், வலிமை ஆகிய மூன்று படங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு எடுத்த நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் காரணமாக வசூல் பாதிக்ககூடும் என கருதி எப்போது வெளியீடு என்பதை குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொங்கல் விடுமுறைக்கு பின் பொது ஊரடங்கு வரலாம் என வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஏப்ரல் 14 நாங்கள் வருகிறோம், அதனை கணக்கில் கொண்டு உங்கள் படங்கள் வெளியீட்டு தேதியை தீர்மானியுங்கள் என அகில இந்திய சினிமாவுக்கு கேஜிஎஃப் படக்குழு எச்சரிக்கை கொடுத்துள்ளதா அல்லது அறிவுறுத்தியுள்ளதா என தமிழ் சினிமா வட்டாரத்தில் விவாதம் எழும்ப தொடங்கியுள்ளது.

அம்பலவாணன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

சனி 8 ஜன 2022