மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 ஜன 2022

பொங்கல் பைய காணோம்: அப்டேட் குமாரு

பொங்கல் பைய காணோம்: அப்டேட் குமாரு

பொங்கல் பை வாங்கிட்டீங்களானு நம்ம நாகப்பட்டினம் பக்கத்துல ஒரு கிராமத்துல போயிட்டிருந்த அக்காக்கள்கிட்ட கேட்டேன். இதோ வாங்கிட்டு போயிட்டிருக்கோம்னு ஒரு ஜவுளி கடை கட்டைப் பைய காட்டினாங்க. என்னங்க இது எல்லாருக்கும் தமிழ்நாடு அரசுனு போட்ட பையிலதான கொடுக்குறாங்க. இது என்ன இங்க மட்டும் இப்படிக் கொடுக்குறாங்கனு கேட்டேன். அது என்னமோ தெரியலை தம்பி, பைய எடுத்துட்டு வாங்கனு சொல்லிட்டாங்க. மத்த இடங்கள்ல பொருள்ல ஒண்ணு ரெண்டை எடுத்துக்குற மாதிரி, இங்க பைய எடுத்துக்கிட்டாங்களோ என்னவோனு சொல்லிட்டே அந்த அக்கா கெளம்பிட்டாங்க.

சரி, நீங்க அப்டேட் பாருங்க.

ரஹீம் கஸ்ஸாலி

ஜனவரி 12 ஆம் தேதி மதுரையில் மோடி தலைமையில் நடைபெறவிருந்த பொங்கல் விழா ரத்து..!- அண்ணாமலை

பொங்கல் பானை மேல் வைத்து, பொங்கல் பொங்குவதுபோல் சீன் போட வாங்கி வைத்திருந்த பஞ்சு எல்லாம் வீணாய் போச்சே..!

PrabuG

ஊரடங்கு முதல் நாள்.. கமுக்கமா செட்டில் ஆகிடுச்சு ஊரே.

பல பேர் ஒமிக்ரானுக்கு காலைல தீபாராதனை காட்டுவானுக போலிருக்கு..

mohanram.ko

ஏன்ணே அவனை அடிக்கறீங்க

நானே ஜாமீன் கிடைக்காம தலைமறைவா இருந்தேன், என்கிட்ட வந்து 'புலி பதுங்கியது பாய்வதற்கா' னு கேட்கறான்

PrabuG

பஞ்சாப் சம்பவத்தை பாத்த எங்களாலயே தாங்க முடியலை. நீங்க எப்படிண்ணே.

பழகிடுச்சுடா.. இப்ப இதை வச்சே எலக்ஷன்ல அழுது ஓட்டு வாங்கிடுவேன்ல..

பர்வீன் யூனுஸ்

ஜனவரி முதல் வாரத்தில் டாஸ்மாக் கடை க்யூவில் நிற்பவர்களில் பெரும்பாலானோர், டிசம்பர் 31-ம் தேதி 'புது வருடத்தில் இருந்து குடிக்க மாட்டேன்' என தீர்மாணித்தவர்களாகவே இருப்பார்கள்.

நாகராஜசோழன்.MA.MLA.

இனி ஊர் உறங்க போகிறது

ஊரடங்கு கொட்ட கொட்ட வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்.

உமா மகேஷ்வரி

லாக்டவுன் போடக்கூடாதுனு கவலைப்படுறவங்க மாஸ்க் போடனும்னு கவனமாயிருக்கறதில்லையே

கடைநிலை ஊழியன்

என்னையும் உங்க புது கார்ல ஒரு ரவுண்டு கூட்டிட்டு போங்க ஜி..

என்னையவே புது கார்ல போக விட மாட்டிங்குறானுங்க.. போவியா..

PrabuG

தமிழ்நாட்டுகாரங்க பரவால்லடா பலூன் பறக்க விடுறதோட விட்ருவாங்க.

பஞ்சாப் பக்கம் போயிடாத. பாதி வழில பஸ் ஏத்தி திருப்பி அனுப்பி விட்ருவாங்க.

mohanram.ko

லாக் டவுன் இருக்கணும், கஸ்டமரும் முழுசா வரணும், அப்படி ஒரு இடத்தில வேலை செய்யணும்...

அதுக்கு நீ டாஸ்மாக்ல தான் வேலை செய்யணும்

மயக்குநன்

10, 12-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு நேரடி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்!- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

எதுக்கும் ஒமைக்ரான்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க பாஸ்..!

mohanram.ko

நீங்க 5வது பாஸ் பண்ணும்போது என்ன பண்ணீங்க?

லாக்டவுன்ல இருந்தேன்

இப்ப நீங்க 8வது பாஸ் பண்றீங்க, இப்ப என்ன செய்றீங்க?

இப்பவும் லாக்டவுன்ல தான் இருக்கேன்

மயக்குநன்

எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் பாஜகவைத் தோற்கடிக்க முடியாது!- அண்ணாமலை.

சத்தம் போட்டுச் சொல்லாதீங்க வாத்தியாரே... 'நோட்டா'வுக்கு கேட்டுடப் போகுது..!

கோழியின் கிறுக்கல்!!

BJPக்கு தேர்தலில் பேச இரண்டே பொய்கள் தான்,

1) நாட்டுக்கு ஆபத்து!

2) நாட்டின் தலைவருக்கு ஆபத்து!!

- லாக் ஆப்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

வெள்ளி 7 ஜன 2022