மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 ஜன 2022

மது விளம்பரம்: சர்ச்சையில் நிதி அகர்வால்

மது விளம்பரம்: சர்ச்சையில் நிதி அகர்வால்

இந்தியாவில் மது விளம்பரங்களில் 1980 களில் முதலில் நடித்தவர் இந்தி நடிகர் சத்ருஹன் சின்கா. அப்போது அதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது காலப் போக்கில் மது விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டது.

அழகுசாதன பொருட்கள், நகை, ஜவுளிக்கடை விளம்பரங்களில் நடிப்பது முன்னணி நடிகைகளின் வழக்கம். ஆனால் இப்போது என்ன மாதிரியான விளம்பரங்களிலும் நடிக்க தயாராக உள்ளனர் இளம் நடிகைகள்.

காஜல் அகர்வால், சம்யுக்த ஹெக்டே இருவரும் ஏற்கனவே மது விளம்பரத்தில் நடித்து எதிர்ப்பை எதிர்கொண்டனர்.

தற்போது ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்த நிதி அகர்வால். அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாராகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க உள்ளார். நிதி அகர்வாலுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூக வலைதளத்தில் பிசியாக இருக்கிறார்.

தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பு கிளப்புவார். தற்போது, அவர் நடித்த மதுபான விளம்பரம் ஒன்று வெளியானது. அதில், ஒரு கோப்பையில் மதுவை ஊற்றி அவர் நுகர்ந்து பார்க்கும் காட்சியும் அந்த மதுபானம் சுவைக்கவும் பருகவும் சிறந்தது என்று பேசும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. இது இந்தியாவின் மிகச்சிறந்த மது வகை என்று பாராட்டுச் சான்றிதழும் வழங்குகிறார்.

இந்த விளம்பரம் இளைஞர்களை மது அருந்த தூண்டுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களும், கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

வியாழன் 6 ஜன 2022