மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 ஜன 2022

திட்டமிட்டபடி வெளியாகுமா வலிமை?

திட்டமிட்டபடி வெளியாகுமா வலிமை?

அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. வலிமை' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 31ஆம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. அதில் 'வலிமை' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 31 அன்று தமிழ்நாடு அரசு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக திரையரங்குகளில் இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்த 100% இருக்கை அனுமதியை 50% ஆக குறைத்து ஆணை வெளியிட்டது.

இதன் காரணமாக ஜனவரி 7 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் திரைப்படம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

அதனால் வலிமை அறிவித்தபடி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது இருந்தபோதிலும் பட வெளியீட்டுக்கான வேலைகள் நடைபெற்று வந்தது. இன்று காலை சென்னை வந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் விநியோகஸ்தர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில், “வலிமை திரைப்படம் வரும் 13ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும்” என தெரிவித்துள்ளார். மேலும் வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லரை அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதன்மூலம் வலிமை பட வெளியீடு சம்பந்தமாக நிலவி வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் போனி கபூர்.

-அம்பலவாணன்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

செவ்வாய் 4 ஜன 2022