மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 ஜன 2022

ஹன்சிகாவின் கைவசத்தில் 9 படங்கள்!

ஹன்சிகாவின் கைவசத்தில் 9 படங்கள்!

ஹன்சிகா மோத்வானி தமிழ் படத்தில் நடித்து முழுதாக இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. 2019ல் அவர் நடித்த 100 படம்தான் கடைசியாக நடித்தது. அவர் நடித்த மகா படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் 2022 முதல் மீண்டும் அதிக படங்களில் நடிப்பதாக கூறியிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி.

அவர் கூறியிருப்பதாவது, “கடந்த ஆண்டு அனைவருக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்தது. குறிப்பாக, திரையுலகம் தாங்க முடியாத கடினமான சோதனைகளால் மிகவும் துன்பத்திற்குள்ளானது. ஆனால் இந்த 2022 புத்தாண்டின் போது அனைவரின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவது, இருட்டை விலக்கி தூரத்தில் தெரியும் வெளிச்சம் போல், பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த கடினமான நேரத்தில் ஆதரவாக இருந்த அனைவரின் அன்பிற்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். அவர்களின் அன்புதான் இந்த உலகத்தை முன்னோக்கி பயணிக்க வைக்கிறது, இந்த கடின காலத்தில் அன்பை அள்ளித்தரும் அவர்களை ஏராளமாகக் கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தயாரிப்பு நிலையின் வெவ்வெறு கட்டத்தில் உள்ள எனது 9 வெவ்வேறு திரைப்படங்களை உங்களுக்கு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு அனைவரின் கனவுகளும் இலக்குகளும் நனவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், வெற்றிகரமாகவும் இருங்கள், மேலும் நேர்மறை எண்ணத்தை பரப்ப மறக்காதீர்கள், அனைவரிடத்திலும் அன்பை பரப்ப வேண்டியது காலத்தின் தேவை” என குறிப்பிட்டுள்ளார் ஹன்சிகா மோத்வானி.

-அம்பலவாணன்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

செவ்வாய் 4 ஜன 2022