மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 ஜன 2022

மாஸ்க் பர்சன்ட்டேஜ்: அப்டேட் குமாரு

மாஸ்க் பர்சன்ட்டேஜ்: அப்டேட் குமாரு

மார்க் பர்சன்ட்டேஜ் பத்தி கேள்விப்பட்டிருப்போம். மாஸ்க் பர்சன்ட்டேஜ் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? நம்ம சென்னைக்காரங்கள்ல மொத்தம் 35 பர்சன்ட்டேஜ்தான் மாஸ்க் போடுறாங்க. பொதுவா எல்லாருக்கும் பயம் விட்டுப் போச்சுனு அமைச்சர் மாசு சொல்லியிருக்காரு. அதுசரி, மொத்தத்துல 35 பர்சன்ட்டேஜ்தான் மாஸ்க் போடுறாங்க. மாஸ்க் போடுறவங்களை ஆய்வு பண்ணினீங்கன்னா அவங்கள்ல 75% க்கு மேல மூக்கை மூடாமதான் மாஸ்க் போடுறாங்க. இவங்ககிட்ட எல்லாம் என்னத்த விழிப்புணர்வை ஏற்படுத்தி என்ன பண்றது சார்...

நீங்க அப்டேட் பாருங்க

balebalu

வண்ணக் கோலங்கள் மட்டுமே தெருவை நிறைக்கட்டும்

பிளீச்சிங் கோலங்கள் இனிமேலும் வேண்டாம்

-OmicronVariant

மயக்குநன்

தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோருவது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க முற்பட்டோம்; ஆனால், இதுவரை அவர் நேரம் ஒதுக்கவில்லை!- டி.ஆர்.பாலு.

நீட்டா ஒதுக்கிட்டாரு போல..?!

PrabuG

2024 ல் மோடி அலை அடிக்கும் - அண்ணாமலை.

தமிழ்நாடு ~

நாங்களாம் சுனாமிலயே ஸ்விம்மங்க போட்டவங்க. போவியா..

கடைநிலை ஊழியன்

மக்களுடைய மறதிதான் திமுகவின் மூலதனம். - டிடிவி தினகரன் #

சார், அந்த பக்கம் போகாதீங்க. ரெண்டு பேர் டோக்கன் வச்சுக்கிட்டு நிக்குறாங்க..

amudu

கொரோனா தொற்று காலத்தில், முதலில் மூட வேண்டிய டாஸ்மாக்கை கடைசியாக மூடுவதும், கடைசியாக மூட வேண்டிய கல்விச் சாலைகளை முதலில் மூடுவது, ஒரு வகை சாபமே.

ℳ𝐬𝐝彡இதயவன்

அடுத்து ரெடியாகிக்கிற வேண்டியது தான் மாமா..

டிஎன்பிஎஸ்சி பரீட்சைக்கா மாப்ள?

பரீட்சைக்கா? ஓமைக்ரான்க்கு அடுத்து ப்ளோரனா அடிய தாங்க மாமா...

Navaneeth

ஜனவரி 12ல் மதுரையில் "மோடி பொங்கல்" கொண்டாடப்படும். - அண்ணாமலை

பொங்கலுக்கு பெஸ்ட் காம்பினேஷன் "வடை" தான

ரஹீம் கஸ்ஸாலி

காங்கிரஸ் கட்சி என்பது பல்லே இல்லாத பாம்பு..- பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.

அப்ப... பிஜேபி என்பது கொடிய விஷப்பாம்புதானே..?

நாகராஜசோழன்.MA.MLA

வாரம் முழுக்க வேலை செஞ்சு சண்டே அதுவுமா காலைல 6 மனில இருந்து வேலை செஞ்சிட்டு இருக்கேன்

உனக்கென்ன மச்சா நீ செம்மையாக வாழற அப்படின்னு ஒருத்தன் சொல்றான்

படுபாவிகடா....

படிக்காதவன்

முந்திரி திராட்சை இல்லாத சர்க்கரை பொங்கலும்

புரிதல் இல்லாத அன்பும் காதலும் பயனில்லாதது...

கடைநிலை ஊழியன்

டு சாப்பாடு & தூக்கம்..

நீங்க ரெண்டு பேர் இருக்கிற வரைக்கும் 2022 இல்லடா.. எந்த வருஷம் வந்தாலும் அண்ணன ஒன்னும் பண்ண முடியாதுடா.

balebalu

2022ல் உணவு உற்பத்திக்கு முன்னுரிமை: வட கொரிய அதிபர் புத்தாண்டு சபதம் =

பசி வந்தால் அணு ஆயுத சோதனையும் பறந்து போகும்

PrabuG

2022 ~அட இருங்கடா.. நான் இன்னும் என் வேலையை ஆரம்பிக்கவே இல்லை..

அதுக்குள்ள முதல் ஞாயிறு அமாவாசைல வந்ததுக்கு திட்ட ஆரம்பிக்குறீங்க.

ஷேக்பரித்

பெட்ரோல் டீசல் விலை ஏறுனதுனால ஜனங்க நடந்து போக ஆரம்பிச்சிட்டாங்க மேடம்..

அப்படியா அப்ப செருப்புக்கு GST 5% லிருந்து 12% மாக உயர்வு

ஏத்திரு..

மயக்குநன்

வரவேண்டிய நேரத்தில் ராஜேந்திர பாலாஜி வருவார்!- முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன்.

மழை வெள்ளம் வந்து பதுங்கு குழி நிரம்பிய பிறகா..?!

கோழியின் கிறுக்கல்!!

ஏன் எப்படி வந்தது என்று தெரியாத சென்னை மழை போலவே,

என் மகளின் கண்ணீரும், ஏன் எதுக்கு வருதுன்னு தெரியாது!

லாக் ஆஃப்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

ஞாயிறு 2 ஜன 2022