மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 ஜன 2022

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்: எஸ்.கே.20 மாற்றம் ஏன்?

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்: எஸ்.கே.20 மாற்றம் ஏன்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து வணிக ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை 19 படங்கள் வெளியாகி இருக்கின்றது. 2013ல் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், 2016ல் வெளியான ரஜினிமுருகன், படங்களின் வெற்றியை போன்று அதன் பின் வெளியான வேலைக்காரன் , சீமராஜா ,மிஸ்டர்லோக்கல், ஹீரோ , நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களின் மூலம் கிடைக்கவில்லை. வியாபாரம், வசூல் இவற்றை கணக்கில் கொள்ளாமல் பிரம்மாண்ட செலவுகள் தொடர்ந்து தோல்விப்படங்களாக அமைந்தன.

இந்த வருடம் சம போட்டி இல்லாமல் வெளியான டாக்டர் படம் எதிர்பார்த்ததை காட்டிலும் தமிழகத்தில் தியேட்டர் கல்லாவை நிரப்பியதால் சிவகார்த்திகேயன் படங்களின் வியாபார மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. இவர் ஏற்கனவே இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இரண்டு படங்களும் இறுதிக்கட்ட பணிகளை முடிக்கும் கட்டத்தில் உள்ளது. முதலில் ‘டான்’ திரைப்படம் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் 2022 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தெலுங்கு இயக்குநர் ‘ஜதி ரத்னலு’ புகழ் அனுதீப் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தமன் முதன் முதலாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கின்றார்.

இந்த திரைப்படத்திற்கு ‘எஸ்.கே 20’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு தமிழ் ஆகிய இருமொழிகளிலும் உருவாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. டான் படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் அசோக் இயக்கும் சிங்கப்பாதை படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்றும் அது எஸ்கே 20 என்றும் அதற்கடுத்து இந்தத் தெலுங்குப் படத்தில் நடிப்பார் என்றும் அது எஸ் கே 21 ஆக இருக்கும் என்றும் முதலில் தகவல் வெளியானது.

2021 நவம்பர் 17 ஆம் தேதி இசையமைப்பாளர் தமன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அதற்கு, உங்கள் அன்புக்கு நன்றி. பின்றோம் தட்றோம் தூக்கறோம் என்று சொல்லி கூடவே எஸ்கே21 என்கிற குறியீட்டையும் பதிவிட்டிருந்தார் தமன்.

இப்போது, தெலுங்குப்படத்தை எஸ்கே 20 என்று சிவகார்த்திகேயனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் அவர் படங்களின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணத்தை விசாரித்தபோது சினிமாவில் தோல்வியில் இருந்து வெற்றி

பெற்று மீண்டுவிடலாம். ஆனால் அதனைத் தக்கவைத்துக் கொள்ளக் கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் தெலுங்கு - தமிழ் என இரு மொழி படத்தில் நடிப்பதன் மூலம் சம்பளம் கூடும் என்பதுடன் படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும். அகில இந்திய அளவில் புரமோஷன் கிடைக்கும் என்பதாலேயே ஏற்கனவே திட்டமிட்ட படங்களின் வரிசைமாறியுள்ளது” என்கின்றனர் சினிமா வட்டாரத்தில்.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

ஞாயிறு 2 ஜன 2022