மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 ஜன 2022

பார்த்திபன் பேசியது வாழ்த்தா? வஞ்ச புகழ்ச்சியா?

பார்த்திபன் பேசியது வாழ்த்தா? வஞ்ச புகழ்ச்சியா?

ஆற்றல் என்ற அமைப்பு மூலம், பல்வேறு துறையில் சிறப்பான பங்களிப்பை செலுத்தியவர்களுக்கு விருது வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், இயக்குநர் பார்த்திபனும் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் பேசியதுதான் விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. சினிமா நிகழ்ச்சிகளில் அத்துறை சார்ந்தவர்களை புகழ்வதும், வஞ்ச புகழ்ச்சியாக பொடி வைத்து வித்தியாசமாக பேசி பார்வையாளர்களை தன்வயப்படுத்துவது கை வந்த கலை. அதே பாணியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்ட விருது வழங்கும் நிகழ்ச்சியில் பார்த்திபன் பேசியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஊரே அடுத்தவங்க மீது கருணை காட்டுவதால், இது கரூர் இல்லை. கருணை ஊர். மாண்புமிகு அமைச்சர் 'தில்' பாலாஜி அவர்களே. இதை நான், தவறிபோய் சொல்லவில்லை. செந்தமிழ்னா செழுமையான தமிழ்னு அர்த்தம். செந்தில் என்றால், செழுமையான தில் நிறைந்தவர் என்று அர்த்தம். அதனால், செழுமையான தில் பாலாஜியைப் பாராட்டுகிறேன். இங்க வந்ததும் அவரோட சீட்டை எனக்கு கொடுத்துட்டு, என்னை அமைச்சர் சீட்டுல உட்காருங்கன்னு சொல்லிட்டு அங்க தள்ளி உட்கார்ந்து கிட்டார். இந்த விளையாட்டு அவருக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. அவர் சீட்டை பிறருக்கு விட்டுக்கொடுத்துட்டு, வெளியில் வந்துட்டு, மறுபடியும் அந்த சீட்டைப் பிடிக்கிறது எப்படினு அவருக்கு தெரியுது. அமைச்சரை பத்தி இந்த விசயத்தை சொல்லலாமா, வேண்டாமானு நினைச்சேன். அ.தி.மு.கவில் இருந்து, தி.மு.கனு அவர் வந்ததை பத்தி பேசலாமானு நினைச்சேன். ஆனால், 'தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு, களமும் அதுதான்' என்பது கலைஞரோட எழுத்து.

அதனால், அரசியலில் சென்டிமென்டை விட, சாமர்த்தியமும், சாதுர்யமும்தான் இங்கே முக்கியம். மக்கள் பணி செய்ய தேவையான அந்த சாதுர்யம் கலைஞர்கிட்டயும் உண்டு, செந்தில் பாலாஜிகிட்டயும் உண்டு. செந்தில் பாலாஜி காயை அப்படி நகர்த்தும்போதே, காயை எப்படி பழமாக்குறதுங்கிறதை தெரிஞ்சு வச்சுருக்காரு. இதை நான் பாசிட்டிவ்வாக சொல்கிறேன். அமைச்சராக இருக்கிறதாலதான் கரூர் மக்களுக்கு இவ்வளவு நல்லதை அவரால் செய்ய முடியுது. அமைச்சர்கிட்ட என்னோட 'ஒத்த செருப்பு' படத்தை பாத்தீங்களானு கேட்டேன். 'பணி சுமைனால இன்னும் பாக்கலை. விரைவில் பார்க்கிறேன்' என்று சொன்னார். அவர்கிட்ட சொன்னேன், ஒரே ஒரு நபர்தான் அந்த படத்துல இருப்பார்னு. அமைச்சரை பத்தி சொல்லும்போது நான் சொல்ல மறந்த இன்னொரு விசயம், கூட்டத்துல போய் இணையுறது வேற விசயம். ஆனால், தனக்கு பின்னாடி ஒரு கூட்டத்தை வச்சுக்கிட்டு, அந்த கூட்டத்தோட போய் இணையுறதுங்கிறது வேற ஒரு விசயம். அந்த மாதிரி விளையாட்டுதான், ஒத்த செருப்பு படத்துல வர்ற அந்த செருப்பும்'னு சொன்னேன்" என்றார்.

இராமானுஜம்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

ஞாயிறு 2 ஜன 2022