>போலீஸ் வேடத்தில் அஜித்

entertainment

அஜித்குமார் – வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛வலிமை’. கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது.

ஹூயுமா குரேஷி நாயகியாகவும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள், முன்னோட்டம் மற்றும் மேக்கிங் வீடியோ ஆகியவை வெளியாகி இருந்தது.

இந்நிலையில் டிசம்பர் 30 அன்று மாலை 6.30 மணியளவில் படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டனர். 3.05 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ட்ரெயிலர் முழுக்க அதிரடி ஆக்க்ஷன் காட்சிகளாக நிறைந்துள்ளன. ட்ரெயிலரின் ஆரம்பமே அதிரடி ஆக்க்ஷன் உடன் ஆரம்பமாகிறது. படத்தில் அர்ஜூனன் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித்குமார் நடித்துள்ளார்.

மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வரும் அஜித்குமார் ஒரு தற்கொலை தொடர்பான விசாரணையில் ஈடுபடுகிறார். இதன் பின்னணியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய கிரைம் நெட்வொர்க் இருப்பதை கண்டறியும் அஜித்குமார் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதையாக இருக்கும் என ட்ரெயிலர் உணர்த்துகிறது.

வில்லனாக கார்த்திகேயன் மிரட்டலாக நடித்துள்ளார். 3 நிமிடம் ட்ரெயிலர் மொத்தமும் அதிரடி ஆக்க்ஷன் காட்சிகள் தான் தூள் கிளப்பி உள்ளது. அஜித்குமார் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை ட்ரெயிலரில் இயக்குனர் பூர்த்தி செய்துள்ளார் .

POWER IS A STATE OF MIND!
Presenting the power-packed trailer of #Valimai
PS: for best results, use headphones 🎧 🙂#ValimaiTrailer : https://t.co/9pl3Yivtd2#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @vigneshshivN @sidsriram

— Boney Kapoor (@BoneyKapoor) December 30, 2021

ஹாலிவுட் தரத்திலான ஆக்சன் காட்சிகளும், பைக் சேஸிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

‘ஏழையா இருந்துட்டு உழைப்பவர்களை கேவலப்படுத்தாத, உயிரை எடுக்குற உரிமை நமக்கு இல்ல. ஜெயிக்கணும், பணம் சம்பாதிக்கணும். வலிமை இருப்பவன் அவனுக்கு என்ன தேவையோ அதை எடுத்து கொள்வான். வலிமை அடுத்தவனை காப்பாற்றத்தான், அழிக்க அல்ல…. தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவனிடம் அவனது சமநிலை தவறினால் அவனது கோபம் எப்படி இருக்கும் என்பதை காட்டுவேன்’… உள்ளிட்ட வசனங்களும் ட்ரெயிலரில் கவனம் ஈர்த்துள்ளன.

மொத்தத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள் இனி ‘வலிமை அப்டேட்’ என எங்கும் குரல் எழுப்ப மாட்டார்கள். அந்தளவுக்கு ஒரு மாஸான அதிரடி ட்ரெயிலரை வழங்கி உள்ளார் வினோத்.

ட்ரெயிலர் வெளியான அரைமணி நேரத்திலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *