மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 டிச 2021

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்

அட்டகத்தி படத்தின் மூலம் 2012ல் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இந்தப் படத்தை வெளியிட்டது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். அந்நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றை ரஞ்சித் இயக்குவது அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

அட்டக்கத்தியை தொடர்ந்து கார்த்தி நடித்த மெட்ராஸ், ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி', 'காலா' ஆகியப் படங்களை இயக்கியுள்ள பா.ரஞ்சித் இந்தப் படங்களில் தலித் அடக்குமுறை, அவர்களின் உரிமைகளை நேரடியாகவே பதிவு செய்திருக்கிறார்.

இந்த வருடம் இவர் இயக்கத்தில் வெளியான சர்பட்டா பரம்பரை, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தயாரித்த பரியேறும் பெருமாள் இந்தப் படங்களும் தலித் போராட்டங்களும், உரிமைகள், அவர்களது கலாச்சாரம் பற்றிய படங்களே.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் தலித் சமூக உரிமை பேசும் படமாக இருக்குமா என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. தற்போது காளிதாஸ் , துஷாரா, கலையரசன் , ஹரி நடிப்பில் 'நட்சத்திரம் நகர்கிறது' என்கிற படத்தை இயக்கிவரும் ரஞ்சித் இந்தப் படத்தை முடித்து விட்டு விக்ரம் படத்தை இயக்குவார் என தெரிகிறது .

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 3 டிச 2021