மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 டிச 2021

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

கொரோனா தொற்று காரணமாக ஹைதராபாத்தில் காலமான நடன இயக்குநர் சிவசங்கர் ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக இன்றைய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

குறிப்பாக அஜித்குமார் ரசிகர்களுக்கு இவரை ரொம்பவே பிடிக்கும். அஜித்குமார் நடித்த வரலாறு படத்தில் அவரை பரதநாட்டியக் கலைஞராக, சற்றே நளினமான பெண் தன்மை கொண்ட ஒரு மனிதராக மிக வித்தியாசமாகக் காட்டியதில் சிவசங்கரின் பங்கு மிக அதிகம். அந்தப் படத்தில் சிவசங்கரின் பங்களிப்பு குறித்து, அவரை கௌரவிக்கும் வகையில் வரலாறு படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்

“வரலாறு படத்தில் அஜித்குமாரின் மூன்று கதாபாத்திரங்களில் பரதநாட்டியக் கலைஞர் கதாபாத்திரத்தை உருவாக்கியபோது இதை நான் சரியாக செய்ய முடியுமா, திரையில் பார்க்கும்போது இது வேறுவிதமாக தெரிந்துவிடாதே என கொஞ்சம் தயங்கினார் அஜித். அப்போது நான் அவரிடம் சிவசங்கர் மாஸ்டரை நம்பி இதை தாராளமாகச் செய்யலாம் என கூறினேன். அந்தப் படத்தின் கதாபாத்திரம் போலவே, பரதநாட்டியத்தின் காரணமாக அவரை அறியாமலேயே அந்தப் பெண் தன்மை வந்துவிட்டது என்றும் ஆனால் சிவசங்கருக்கும் இரண்டு மகன்கள் உள்ளார்கள் என்றும் கூறினேன். அவர் மீதுள்ள மரியாதை காரணமாகவே அந்தப் படத்தில் அஜித்குமார் கதாபாத்திரத்துக்கு சிவசங்கர் என பெயரும் வைத்தேன்.

அந்தப் படத்தில் அஜித்குமார் நடை உடை பாவனைகளை அழகாக வடிவமைத்துக் கொடுத்தார் சிவசங்கர். அதுமட்டுமல்ல, அஜித்குமார் கதாபாத்திரத்தை வைத்து ஒரு சண்டைக்காட்சியை படமாக்கியபோது, ஒவ்வொரு எதிரியையும் அஜித் அடித்து வீழ்த்தும்போது ஒவ்வொருவிதமான நடன முத்திரையை போஸாகக் காட்டுவது போல வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதற்கு பொருத்தமாக அந்த சண்டைக்காட்சியில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து கொடுத்தார் சிவசங்கர் மாஸ்டர். தியேட்டரில் அந்த சண்டைக்காட்சிக்கு ரசிகர்களின் கைதட்டல் அதிகம் கிடைத்தது” எனக் கூறியுள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.

-இராமானுஜம்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

புதன் 1 டிச 2021