மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 டிச 2021

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழி சினிமாவில் பிரபலமான நடிகர் அர்ஜுன். இவர் தற்போது தமிழை காட்டிலும் தெலுங்கு படங்களிலேயே அதிகம் நடித்து வருகிறார்.

மோகன் லால் நடிப்பில் வெளியாகும் மரைக்காயர் படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அர்ஜுன் மீது நடிகை ஒருவர் கொடுத்துள்ள பாலியல் புகார் சினிமா வட்டாரத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்ஜுன் நடிப்பில் கன்னடத்தில் வெளியான விஸ்மயா இந்த படம் தமிழில் நிபுணன் என்கிற பெயரில் வெளியானது. இதில் அர்ஜூனுடன் இணைந்து நடித்த நடிகைதான் புகார் கொடுத்தவர்.

தமிழில் நெருங்கி வா, முத்தமிட்டுவிடாதே உள்ளிட்ட படங்களில் நடித்த கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன். இவர் கடந்த 2018 ம் ஆண்டு விஸ்மயா படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் அர்ஜுன் மீது எவ்வித தவறும் இல்லை என்னும் முடிவிற்கு காவல்துறை வந்துள்ளதாம்.

இதை தொடர்ந்து விரைவில் அர்ஜுனுக்கு சாதகமான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-இராமானுஜம்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

புதன் 1 டிச 2021