மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 நவ 2021

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாறாகவும், 1983இல் இந்தியா உலகக் கோப்பையை வென்றதையும் மையப்படுத்தி இந்தியில் உருவாகியுள்ள படம் 83.

இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரன்வீர் சிங். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள இந்தப் படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார்.

கிறிஸ்துமஸ் ரிலீஸாக வரும் டிசம்பர் 24இல் இந்தியில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகிறது. இந்தப் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நடிகர் பிரித்வி ராஜ் கைப்பற்றியுள்ளார்.

நடிகராக, இயக்குநராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் மாறி பிரித்விராஜ் புரொடக்‌ஷன் சார்பில் மலையாளத்தில் படங்களைத் தயாரித்து வருகிறார் பிரித்வி ராஜ். இன்னொரு பக்கம் ஒரு விநியோகஸ்தராக பேட்ட, பிகில், மாஸ்டர் என மற்ற மொழிகளில் உருவாகும் பெரிய படங்களை வாங்கி கேரளாவில் வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-அம்பலவாணன்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

செவ்வாய் 30 நவ 2021