மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 நவ 2021

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான 'ஜெய் பீம்' அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் பொது வெளியில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் 'ஜெய் பீம்' படம் திரையிடப்பட்டுள்ளது

'ஜெய் பீம்' படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.

இதற்கு முன்பு திரையில் சொல்லப்படாத இருளர், பழங்குடியினர் வாழ்வியலை மிக நேர்த்தியாக 'ஜெய் பீம்' படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். படத்தைப் பார்த்துவிட்டு சூர்யாவை நெகிழ்ந்து பாராட்டிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அம்மக்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

தமிழ் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் குறிப்பாகக் கேரளா, மகாராஷ்டிராவில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மகாராஷ்டிராவில் பொதுவெளியில் 'ஜெய் பீம்' படம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் திரையிடப்பட்டுள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-அம்பலவாணன்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

செவ்வாய் 30 நவ 2021