மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 நவ 2021

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் கத்ரினா கைப், விக்கி கவுஷல் திருமணம் டிசம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பர்வாரா என்ற இடத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் 'டெஸ்டினேஷன்' திருமணமாக நடக்கவுள்ளது.

மெஹந்தி உள்ளிட்ட திருமண நிகழ்ச்சிகளை உற்றார், உறவினர்களுடன் சிறப்பாக நடத்த மணமக்கள் திட்டமிட்டுள்ளார்களாம். தன்னுடைய திருமண ஆடைகள் குறித்து டிரையல் பார்ப்பதற்காகக்கூட தன்னுடைய வீட்டைப் பயன்படுத்தாமல் தோழிகளின் வீட்டை கத்ரினா பயன்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. விஷயம் கசிந்து அது புகைப்படமாக மாறிவிடக் கூடாது என்கிற முன் எச்சரிக்கைதான் இதற்கு காரணம் என்கின்றனர்.

கத்ரினாவை விட விக்கி கவுஷல் ஐந்து வயது இளையவர். கடந்த சில வருடங்களாகவே இருவரும் காதலித்து வருகிறார்களாம். திருமணம் நடைபெற உள்ள அந்த ரிசார்ட்டில் மொத்தமாக ஐந்து நாட்களுக்கு வேறு எந்த விருந்தினர்களும் தங்க முடியாதபடி ஒட்டுமொத்தமாக திருமண வீட்டாரால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

பாலிவுட்டில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி திருமணத்துக்குப் பிறகு இவர்களின் திருமணம் பற்றித்தான் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களிலும் இந்தி சினிமா ரசிகர்கள், காத்ரினா கைப், விக்கி கவுசல் திருமணம் பற்றி பல்வேறு கமென்ட்டுகள், மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.

-இராமானுஜம்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

செவ்வாய் 30 நவ 2021